ETV Bharat / city

பணியில் மெத்தனமாக செயல்பட்ட அலுவலர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்த அமைச்சர்

சார் பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மெத்தனமாக செயல்பட்ட நொளம்பூர் சார்பதிவாளர் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களையும் கூண்டோடு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

பணியில் மெத்தனமாக செயல்பட்ட அலுவலர்கள் ஐந்து பேரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்த அமைச்சர்

author img

By

Published : Sep 21, 2022, 6:59 AM IST

Updated : Sep 21, 2022, 7:28 AM IST

சென்னை: பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி சென்னை அண்ணாநகர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஆவணங்களை முறையாக பராமரிக்காதது, பொதுமக்களை காக்க வைத்தல், உரிய ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் மாவட்ட பதிவாளர், சார் பதிவாளர் தகவல் பதிவாளர், உதவியாளர் உள்ளிட்ட ஐந்து பேரை பணியிட மாற்றம் செய்து அமைச்சர் அதிரடி உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி, “பத்திரப்பதிவுத்துறை மக்களுக்கு சேவை செய்யும் துறையாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில், பத்திரப்பதிவு அலுவலகங்களில் பணிகள் சரியான முறையில் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கவே ஆய்வுக்கு வந்தேன்.

கடந்த எட்டு மாதங்களில் 16 லட்சம் பத்திரப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது, அதன் மூலமாக அரசுக்கு 8,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்த தொகை கடந்த ஆண்டை விட 2,500 கோடி ரூபாய் அதிகம்.

பத்திரப்பதிவில் முறைகேடுகளை தடுக்கவும், மோசடியாக பதிவு செய்யப்பட்ட நிலங்களை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கவும் , முறைகேடான ஆவணப்பதிவுகளுக்கு துணை போன அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் 1908என்ற சட்டத்திருத்தம் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சட்டத்தின் நடைமுறை வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளது.

அரசு மற்றும் தனியார் நிலங்களை முறைகேடாக ஆவண பதிவு செய்த 80 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுக்கான ஆன்லைன் சர்வர்கள் தொழில் நுட்ப உதவியுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

வீட்டு பத்திரங்கள், ஒப்பந்த பத்திரங்கள் என அனைத்து வகை பதிவுகளும் இனையதளம் மூலமாக செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அது மட்டுமின்றி எந்த வகையில் மக்களுக்கு சேவையை எளிமைப்படுத்த முடியுமோ அந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும்,” என்று தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின் இறுதியில் அவரது மகன் திருமணம் குறித்து கேள்வி எழுப்பியதால் அதற்கு பதிலளிக்காமல் எழுந்த, பின் இந்த கேள்விக்கு, ”அதிமுகவினர் அரசியலுக்காக இதனை பரப்பி வருகின்றனர். சோறு போட்டது தப்பா? முடிந்தால் அவர்களையும் சோறுபோட சொல்லுங்க” என்று கூறி சென்றுவிட்டார்.

இதையும் படிங்க: நான் ஏன் மன்னிப்புக்கேட்க வேண்டும்? - விமர்சனம் செய்தவர்களுக்கு ஆ. ராசா சரமாரி கேள்வி

Last Updated : Sep 21, 2022, 7:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.