ETV Bharat / city

மறைமுக தேர்தலும், அதிமுகவின் ராஜ தந்திரமும்...! - தமிழக மேயர் தேர்தல்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் சில முக்கிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த ஆளும் அதிமுக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கு பின்னால் மிகப்பெரிய ராஜதந்திரம் ஒளிந்துள்ளது.

The indirect election, Behind tactics of the AIADMK.!
author img

By

Published : Nov 21, 2019, 12:56 AM IST

தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர்களை மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தேடுக்கலாம் என்று ஆளுங்கட்சிக்கு தொண்டர்களிடம் இருந்து அதிக 'பிரஷர்' வந்தது. இதையடுத்து ஏற்கனவே அமைச்சரவைக் கூட்டம் நடந்து 13 நாட்களே முடிந்த நிலையில் 19ஆம் தேதி அமைச்சரவை கூட்டப்பட்டது.

அப்போது, மறைமுக தேர்தல், உள்ளாட்சி தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு, ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. அதிலும் குறிப்பாக மாநகராட்சி மேயர்களை மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டது என்றும் விரைவில் அவசர சட்டம் இயற்றப்படலாம் என்றும் தகவல் வெளியாகியது. இந்நிலையில் மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

அந்த சட்டத்தில் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்காமல், வெற்றிபெற்ற உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கபடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்தின் மூலம் அதிமுக தனது கூட்டணி கட்சிகளின் வாயடைத்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலை கூட்டணி வைத்தே எதிர்கொள்ள ஆளுங்கட்சி தயாரானது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாமக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் 20 சதவீதம் சீட், 3 மேயர் பதவி என்று ஆளுங்கட்சியிடம் துண்டு போட்டு வைத்திருந்தன. கூட்டணி கட்சிகளின் இந்த நச்சரிப்பு ஆளுங்கட்சிக்கு பிடிக்கவில்லை. அவர்களின் வாயடைக்க, மறைமுக தேர்தல் முறையை அரசு கையிலெடுத்துள்ளது.

மேலும் பல உள்ளாட்சி அமைப்புகளில் பணிகள் நடக்காததால் ஆளும் கட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இருந்ததாலும் இந்த மறைமுக தேர்தலுக்கு அதிமுக 'ஓகே' செய்துள்ளது. இந்த மறைமுக தேர்தல் மூலம் எந்தக் கட்சி கவுன்சிலர்கள் அதிகம் வெற்றி பெறுகின்றனரோ, அதைப்பொருத்தே மேயர் தேர்வு இருக்கும். ஆளுங்கட்சியினர் கவுன்சிலர்களை விலைக்கு வாங்குவது, கட்சி மாறி வாக்களிக்க வைப்பது என பல்வேறு விதிமீறல்கள் நடக்கும். இதையெல்லாம் தாண்டி ஆளுங்கட்சியை பல்வேறு முக்கிய புள்ளிகளும், வாரிசுகளும் மேயர் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வந்தனர்.

இதற்கு மறைமுகமாக முட்டுக்கட்டை போட்டுள்ளது ஆளும் அதிமுக அரசு. எந்த ஒரு வார்டிலும் போட்டியிடாத முன்னாள் எம்பிக்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் 'ஸ்ட்ரைட்டா' மேயர் கேட்பது இதன்மூலம் தடுக்கப்படும். மேலும், கூட்டணி கட்சிகளும் தங்கள் 'டிக்' அடித்து வைத்திருந்த மாநகராட்சியை தங்களுக்கு வேண்டும் என கேட்க முடியாத சூழலும் உருவாகி உள்ளது.

இதையும் படிங்க : உள்ளாட்சி தேர்தல் புதிய மாவட்டங்களை பாதிக்காது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

Intro:Body:சென்னை// வி.டி. விஜய்// சிறப்பு செய்தி

'மறைமுக தேர்தல்':

கூட்டணி குழப்பத்துக்கு புது முடிவு

மறைமுக தேர்தல் மூலம் உட்கட்சிக்குள்ளும், கூட்டணிக்குள்ளும் எழும் குழப்பங்களுக்கு அதிமுக முட்டுக்கட்டை போட்டுள்ளது.

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர்களை மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தேடுக்கலாம் என்று ஆளுங்கட்சிக்கு தொண்டர்களிடம் இருந்து அதிக 'பிரஷர்' வந்தது. இதையடுத்து ஏற்கனவே அமைச்சரவை கூட்டம் நடந்து 13 நாட்களே முடிந்த நிலையில் 19 ஆம் தேதி (நேற்று) அமைச்சரவை கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் மறைமுக தேர்தல், உள்ளாட்சி தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு, ஏற்பாடுகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. அதிலும் குறிப்பாக மாநகராட்சி மேயர்களை மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டது என்றும் விரைவில் அவசர சட்டம் இயற்றப்படலாம் என்றும் தகவல் வெளியாகியது. இந்நிலையில் மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அந்த சட்டத்தில் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்காமல், வெற்றிபெற்ற உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்க படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அவசர சட்டத்தின் மூலம் அதிமுக தனது கூட்டணி கட்சிகளின் வாயடைத்துள்ளது. உள்ளாட்சி தேர்தலை கூட்டணி வைத்தே எதிர்கொள்ள ஆளுங்காட்சி தயாரானது. இதை சாக்காக வைத்து கொண்டு பாமக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் 20 சதவீதம் சீட், 3 மேயர் பதவி என்று ஆளுங்கட்சியிடம் துண்டு போட்டு வைத்திருந்தன. கூட்டணி கட்சிகளின் இந்த நச்சரிப்பு ஆளுங்கட்சிக்கு பிடிக்கவில்லை. அவர்களின் வாயடைக்க தூர்ந்து போயிருந்த மறைமுக தேர்தல் முறையை அரசு கையிலெடுத்தது. மேலும் பல உள்ளாட்சி அமைப்புகளில் பணிகள் நடக்காததால் ஆளும் கட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இருந்ததாலும் இந்த மறைமுக தேர்தலுக்கு அதிமுக 'ஓகே' செய்துள்ளது.

இந்த மறைமுக தேர்தல் மூலம் எந்தக் கட்சி கவுன்சிலர்கள் அதிகம் வெற்றி பெறுகின்றனரோ, அதைப்பொருத்தே மேயர் தேர்வு இருக்கும். ஆளுங்கட்சியினர் கவுன்சிலர்களை விலைக்கு வாங்குவது, கட்சி மாறி வாக்களிக்க வைப்பது எனப் பல்வேறு விதிமீறல்கள் நடக்கும். இதையெல்லாம் தாண்டி ஆளுங்கட்சியை பல்வேறு முக்கிய புள்ளிகளும், வாரிசுகளும் மேயர் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வந்தனர். இதற்கு மறைமுகமாக முட்டுக்கட்டை போட்டுள்ளது ஆளும் அதிமுக அரசு. எந்த ஒரு வார்டிலும் போட்டியிடாத முன்னாள் எம் பிக்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் 'ஸ்ட்ரைட்டா' மேயர் கேட்பது இதன்மூலம் தடுக்கப்படும். மேலும், கூட்டணி கட்சிகளும் தங்கள் 'டிக்' அடித்து வைத்திருந்த மாநகராட்சியை தங்களுக்கு வேண்டும் என கேட்க முடியாத சூழலும் உருவாகி உள்ளது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.