ETV Bharat / city

வேளாண் பட்ஜெட்டில் பனை வளர்ச்சித் திட்டங்கள்.. தமிழ்நாடு அரசுக்கு குமரி அனந்தன் பாராட்டு - தமிழ்நாடு

வேளாண் பட்ஜெட்டில் பனைக்கு முக்கியத்துவம் வழங்கியதற்கு காங்கிரஸ் மூத்தத் தலைவர் குமரி அனந்தன் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

வேளாண் பட்ஜெட்டில் பனைக்கு முக்கியத்துவம் வழங்கிய அரசுக்கு பாராட்டு

author img

By

Published : Aug 19, 2021, 10:55 PM IST

சென்னை: வேளாண் பட்ஜெட்டில் பனைக்கு முக்கியத்துவம் வழங்கியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், பனைமரத் தொழிலாளர் நல வாரிய முன்னாள் தலைவருமான குமரி அனந்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 14ஆம் தேதியில் வெளியிடப்பட்ட வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் பாரம்பரிய பனைமரத் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

பனை விவசாயிகளுக்கான திட்டம்

அப்போது, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தமிழ்நாட்டின் பாரம்பரிய மரமான பனைமர தொழிலை நம்பியிருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் பெருக்கவும், பனைமரங்களைப் பாதுகாக்கவும் பட்ஜெட்டில் திட்டங்களை அறிவித்தார்.

பனைமரங்களை வெட்ட வேண்டுமென்றால் அந்தந்த மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றார். மேலும் பனைமரங்களால் விவசாயிகள் பயனடைவதற்கு செயல் ஆற்றப்படுவதற்கான வழியையும் தெரிவித்தார்.

அதே நேரம், பனை மரம் ஏறும் கருவியை பரவலாக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், பனைமரத் தொழிலாளர் நல வாரிய முன்னாள் தலைவருமான குமரி அனந்தன் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

  • பனை மரங்களை வெட்டக்கூடாது,
  • பனை மேம்பாட்டு இயக்கம் தொடக்கம்,
  • 75 லட்சத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் இலவசமாக வழங்கல்,
  • ஒரு லட்சம் பனை மரக்கன்றுகள் நடுதல்,
  • ரேஷன் கடைகளில் கருப்பட்டி
  • பனை பொருள்கள் விற்பனை செய்தல்

உள்ளிட்ட அரசின் முடிவுகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், வேளாண் பட்ஜெட்டில் பனைக்கு முக்கியத்துவம் வழங்கியதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பனைமரத் தொழிலாளர் நல வாரிய முன்னாள் தலைவர் குமரி அனந்தன் நன்றி தெரிவித்துள்ளார்.

அரசிடம் கோரிக்கை

அதே நேரம் உடலை வருத்தி பனைமரத்தில் விவசாயிகள் ஏறுவதற்குப் பதிலாக, பனை மரம் ஏற இயந்திரம் ஒன்றைக் கண்டுப்பிடிக்க வேண்டுமென கோவை வேளாண் பல்கலைக் கழகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதனடிப்படையில்தான் 2010ஆம் ஆண்டு பனைமரம் ஏறுவதற்கான இயந்திரம் உருவாக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இயந்திரத்தை பரவலாக்க தமிழ்நாடு அரசு முயற்சி எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதையும் படிங்க: 'பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டால் போராட்டம் - விக்கிரமராஜா எச்சரிக்கை'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.