ETV Bharat / city

ஏப். 4 வரை தேர்தல் பரப்புரை மேற்கொள்ளலாம் - சத்யபிரத சாகு

சென்னை: ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணிவரை தேர்தல் பரப்புரை மேற்கொள்ளலாம் எனத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

ஏப். 4ஆம் தேதிவரை தேர்தல் பரப்புரை மேற்கொள்ளலாம்

author img

By

Published : Mar 31, 2021, 4:45 PM IST

தமிழ்நாட்டில் இன்னும் சில நாள்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 31) செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி காலை 7 மணிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பாளர்களின் பெயர்களை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஓட்டும் பணி இன்றுடன் (மார்ச் 31) முடிந்து, ஏப்ரல் 5ஆம் தேதி வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்படும். தேர்தலுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னர், ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணிவரை தேர்தல் பரப்புரை மேற்கொள்ளலாம்.

திருச்சி வேட்பாளர் நேரு குறித்த சர்ச்சை சிபிஐ விசாரணைக்கு செல்லவில்லை. இது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும்.

தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர்
தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர்

கடம்பூர் ராஜு, தயாநிதிமாறன் குறித்த புகார்கள்

கடம்பூர் ராஜு தேர்தல் பறக்கும் படை தாக்கிய பிரச்சினை குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தயாநிதிமாறன் குறித்த புகார் தேர்தல் ஆணையத்திடம் வந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நாளன்று 6,817 மண்டல தேர்தல் அலுவர் பணியாற்றுவார்கள். அதிகமாக பணப்பட்டுவாடா செய்யும் தொகுதியாக சேலம் 42 கோடி, சென்னையில் 36 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ரூ. 76.89 கோடி, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ரூ. 139.4 கோடி, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ரூ. 952.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

133 பணப்பட்டுவாடா புகார்கள்

சமூக வலைதளம் மூலம் பரப்புரை செய்வதை கண்காணிக்கப்படுவது கடினம் என்றும், தமிழ்நாட்டில் பணப்பட்டுவாடா குறித்து 133 புகார்கள் வந்தன. அதில், 57 புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'தேர்தலுக்காக 14 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.