ETV Bharat / city

கைதிகளுக்கு பரோல் வழங்கும்போது விசாரணை காலத்தை கணக்கில் கொள்ள வேண்டும்- உயர் நீதிமன்றம்

தண்டனை சிறைவாசிகளுக்கு பரோல் விடுப்பு வழங்கும் பொழுது விசாரணை காலத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

parole to prisoners  சென்னை உயர் நீதிமன்றம்  Madras High Court  தண்டனை சிறைவாசி  பரோல்

author img

By

Published : Jun 10, 2021, 7:31 PM IST

சென்னை: சென்னை புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ளவர் முகமது அலி.

இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும் அதன் பின்னர் கடந்த 2019 ஆண்டு டிசம்பர் மாதம் எனக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விசாரணை நீதிமன்றம் வழங்கியது. 2016 ஆம் ஆண்டு நான் கைது செய்யபட்டது முதல் தொடர் சிறையில் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறைவிதிப்படி மூன்று ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பிறகுதான் ஒரு மாத கால சாதாரண விடுப்பிற்கு தகுதி பெறுவார்கள். அதனடிப்படையில் விடுப்பு விண்ணப்பமானது புழல் மத்திய சிறைக்கண்காணிப்பாளரால், தண்டனை காலத்திற்கு பிறகு கணக்கிடப்பட்டு ஒரு வருடம் 7 மாத காலம் மட்டுமே பூர்த்தி செய்து இருப்பதாக கூறி நிராகரித்து உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

எனவே சிறை கண்காணிப்பாளர் உத்தரவை ரத்து செய்து பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.என்.மஞ்சுளா அவர்களின் முன்பு விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதிகள், தண்டனை சிறைவாசிகளின் விடுப்பு தொடர்பான கோரிக்கைகளை பரிசீலனை செய்யும் பொழுது விசாரணை காலத்தையும் கணக்கில் கொண்டு பரிசீலனை செய்யவேண்டும் எனவும், சிறைக்கண்காணிப்பாளரின் பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளபடி ஒன்றிய அரசு சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவர்களின் விடுப்பு தொடர்பான மனுக்களை மாநில அரசு தான் முடிவெடுக்கவேண்டுமே தவிர சிறைக்கண்காணிப்பாளருக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி பரோல் வழங்க சிறைக்கண்காணிப்பாளர் நிராகரித்து பிறப்பித்த உத்தரவினை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும், மனுதரார் கோரிக்கை தொடர்பான ஆவணங்களை நான்கு வாரத்திற்குள் மாநில அரசிற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும், அதனடிப்படையில் மாநில அரசு நான்கு வார காலத்திற்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.