ETV Bharat / city

'அதிமுகவில் நிலவும் சர்வாதிகார போக்கு... யாரும் விபரீத செயலில் ஈடுபட வேண்டாம்...' - ஓபிஎஸ் ட்வீட்

author img

By

Published : Jun 22, 2022, 9:10 AM IST

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் ட்வீட்
ஓபிஎஸ் ட்வீட்

அதிமுகவில் "ஒற்றை தலைமை" விவகாரம் மிகப் பெரிய பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அக்கட்சி நிர்வாகி ஒருவர் நேற்று (ஜூன்21) தீக்குளிக்க முயன்றார்.

இதுகுறித்து அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவரது டிவிட்டர் பக்கத்தில், 'மாபெரும் மக்கள் இயக்கமாம் அதிமுகவில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றபோது, தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவரும், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட இணைச் செயலாளருமான கேசவன் அவர்கள் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

ஓபிஎஸ் ட்வீட்
ஓபிஎஸ் ட்வீட்

இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கட்சித் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த தருணத்தில், "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜெயலலிதா நினைவிடம் அருகே ஓபி.எஸ் ஆதரவாளர் தீக்குளிக்க முயற்சி.. சூடு பிடிக்கும் ஒற்றை தலைமை விவகாரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.