சென்னை: தமிழ்நாட்டில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.
அவ்வாறு தொற்று கண்டறியப்படும் பள்ளிகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மூடப்பட்டு சுத்தம் செய்யப்படுவதும், உடன் இருந்த மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று (செப்.8) அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தலைமைச் செயலர் வெ. இறையன்பு பிற்பகல் 3 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.
பள்ளிகளில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை, அதற்கான முன்னேற்பாடுகள் செய்வது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறுகிறது.
இதையும் படிங்க: கோவிட் பரவல்; பெற்றோரை இழந்த மாணாக்கர்கள் விவரங்கள் சேகரிக்க உத்தரவு