இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
'நிவர்' புயல் காரணமாக, அரசு கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. எனினும், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கெங்காவரம் கிராமத்தைச் சேர்ந்த தனபால் என்பவரின் மகன் சரவணன் என்பவர் வரவேற்புப் பந்தலில் காற்று அடித்து கம்பம் சரிந்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த சரவணன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சரவணன் குடும்பத்திற்கு நான்கு லட்சம் ரூபாய் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், ஆறு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும் ஆக மொத்தம் 10 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.