ETV Bharat / city

சென்னை மாநகராட்சியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை - சென்னை மாநகராட்சி

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள், தங்கள் சுற்றுப்புறங்களில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க 1913 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை

author img

By

Published : Aug 19, 2021, 7:31 PM IST

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள 2,129 சிறு வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

1,260 கொசு ஒழிப்பு நிரந்தர பணியாளர்கள், 2,359 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 3,619 பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும்,

  • 256 மருந்து தெளிப்பான்கள்,
  • 167 பவர் ஸ்ப்ரே
  • பேட்டரி மூலம் இயங்கும் 479 ஸ்ப்ரே,
  • 287 கையினால் இயங்கும் புகை பரப்பும் இயந்திரங்கள்,
  • 12 சிறிய புகை பரப்பும் இயந்திரங்கள்
  • 68 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகை பரப்பும் இயந்திரங்கள்

ஆகியவற்றைக் கொண்டு கொசுக்களை கட்டுப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் தங்கள் அருகாமையில் உள்ள பொது இடங்களில் நீர் தேங்கும் இடங்கள், கொசுப்புழுக்கள் உருவாக வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்தால் மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

இதன் மூலம் கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள இடங்களில் பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படும்.

தற்பொழுது அவ்வப்பொழுது மழை பெய்து வருவதால், மழைநீர் தேங்கக்கூடிய இடங்களில் கொசு புழுக்கள் வளர வாய்ப்புள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்களின் வீடு, சுற்றுப்புறத்தில் கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள இடங்களை தூய்மையாக பராமரித்து மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'சென்னைக்கு வந்த 7 லட்சத்து 66 ஆயிரத்து 770 கோவிஷீல்ட் தடுப்பூசிகள்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.