நடிகர் விஜய்யின் 47ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வட சென்னை, கொருக்குப்பேட்டை, அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
துப்புரவுப் பணியாளர்கள், ஊனமுற்றவர்கள், ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்களுக்கு வீட்டுக்குத் தேவையான அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.