ETV Bharat / city

'பெரியகுளம் தொகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க சாத்தியக்கூறு இல்லை' - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - வேளாண்மைத்துறை அமைச்சர்

பெரியகுளம் தொகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க அவசியம் ஏற்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
author img

By

Published : Apr 22, 2022, 4:41 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று (ஏப்.22) கேள்வி நேரத்தின்போது, பெரியகுளம் தொகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க அரசு முன் வருமா என தொகுதி எம்எல்ஏ கே.எஸ். சரவணகுமார் எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், 'வெற்றிலை சாகுபடியை ஊக்கப்படுத்த ஹெக்டேருக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

வெற்றிலை சாகுபடியில் பல்வேறு சவால்கள் உள்ளன. பெரியகுளம் தொகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க சாத்தியக்கூறு இல்லை. எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.

மேலும், இன்றைய தலைமுறையிடம் வெற்றிலை போடும் பழக்கம் ஒழிந்துவிட்டது, இப்போதெல்லாம் பீடா தான். அதிலும், தடை செய்யப்பட்ட பீடாக்களும் புழக்கத்தில் உள்ளன என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு தெரிவித்தார்.

இதையும் படிங்க: கும்பகோணம் கொழுந்து வெற்றிலை விவசாயிகளின் பரிதாபம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.