சென்னை அடுத்த பழைய பல்லாவரத்தில் மின்சார வாரிய பகிர்மான கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த மின்சார வாரியத்தில் பல்லாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதி மக்கள் மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பல்லாவரத்தில் உள்ள சில தெருக்களில் உள்ளவர்கள் முறையாக மின்கட்டணம் செலுத்தவில்லை என மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அதனால் அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், இன்று (நவ. 03) மின்சார வாரியத்தில் மின் கட்டணம் செலுத்த வந்திருந்தனர். ஆனால், மின்சார வாரியத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதன்காரணமாக, பொதுமக்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக கட்டணம் செலுத்த முடியாமல் காத்திருந்தனர்.
இதையும் படிங்க: மின்சார வாரியம் தனியார்மயமாவதைக் கண்டித்து மாநில அளவில் போராட்டம்