சென்னை: மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள், கட்டட கழிவுகள், மற்றும் விதிகளுக்குப் புறம்பான கழிவுநீர் இணைப்புகளை துண்டிக்க மண்டல அளவில் முதன்மைப் பொறியாளர் தலைமையில் குழுவை மாநகராட்சி அமைத்துள்ளது.
ஒரு குழுவில் உதவி முதன்மைப் பொறியாளர், உதவி அல்லது இளநிலைப் பொறியாளர், மின்சாரத் துறையின் உதவி பொறியாளர், சாலைப் பணியாளர்கள் மற்றும் மலேரியா பணியாளர்களை இருப்பார்கள். மேலும் ஒரு குழுவில் ஒரு லாரி, ஜேசிபி, ஒரு வாகனம் இருக்கும்.
ஒவ்வொரு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தீவிர பறக்கும் படை ஆக்கிரமிப்புகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை ஒவ்வொரு சனிக்கிழமையும் தலைமைப் பொறியாளரிடம் குழு ஆணையர் இடம் சமர்ப்பிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சதுப்பு நிலப்பகுதி: இந்திய புள்ளியியல் நிறுவனத்திற்கு மாற்றிய உத்தரவை எதிர்த்து வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு