ETV Bharat / city

கிண்டி கிங்ஸ் முதியோர் மருத்துவமனை கட்டிட உறுதித்தன்மையை ஆய்வு செய்ய குழு அமைப்பு !

கிண்டி கிங்ஸ் முதியோர் மருத்துவமனை கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய, ஐ.ஐ.டி. பேராசிரியர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

minister
minister
author img

By

Published : May 26, 2022, 7:21 AM IST

சென்னை: சென்னை கிண்டி மடுவின்கரை, ஆலந்தூர் பகுதிகளில் மழை காலங்களில் வெள்ளநீர் தேங்குவதால், மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் கிண்டி ஜி.எஸ்.டி. சாலையில் 2 கால்வாய் பாலங்கள் அமைத்து மழைநீரை அடையாறு ஆற்றுக்கு அனுப்பி வைக்கும் பணிகளும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், கிண்டியில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "கடந்த ஆண்டு பருவ மழையின்போது ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தோம். அம்பாள் நகரில் தேங்கும் தண்ணீரை அகற்றும் வகையிக் 400 மீட்டர் நீளத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வடிகால் கட்டப்பட்டு மழைநீர் தேங்காத நிலையை உருவாக்கியுள்ளோம்.

சென்னை கிண்டி மடுவின்கரையில் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான பணிகளை பார்வையிட்டோம். சென்னை கிண்டி மடுவின்கரை, ஆலந்தூர் பகுதிகளில் திட்ட மதிப்பீடு தயார் செய்து மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும், அடுத்த மழையில் சென்னையில் மழைநீர் தேங்கக் கூடாது என்ற ஆலோசனையை முதலமைச்சர் வழங்கியுள்ளார். அதன்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், கிண்டி கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்ட முதியோர் மருத்துவமனை, கரோனா மருத்துவமனையாக பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது கரோனா பரவல் குறைந்துவிட்டதால், இந்த மருத்துவமனையை மீண்டும், முதியோர் மருத்துவமனையாக மாற்றப்படும்.

இந்த மருத்துவமனையின் தரம், உறுதித்தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் மனு சந்தானம் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மருத்துவமனை கட்டிடத்தை ஆய்வு செய்து அறிக்கை அளித்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: வரும் கல்வி ஆண்டிற்கான காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.