சென்னை: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, "தீபாவளி பண்டிகையை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடும் வகையில் தீபாவளிக்கு மறுநாள் 5.11.21 (வெள்ளிக்கிழமை)தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு அலுவலக பணியாளர்கள் ஆசிரியர்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்.
ஒன்றிய அரசு ஊழியர்கள் 31 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு பெற்று வரும் நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் 17 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை மட்டுமே பெற்று வருகிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, ஒன்றிய அரசுக்கு இணையான அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும். மேலும், பள்ளிக்கல்வித்துறையில் 10-03-2020க்கு முன்பாக உயர் கல்வி பயில முன் அனுமதி பெற்ற, ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊக்க ஊதியம் வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: கீழடி அகழாய்வு தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு...