ETV Bharat / city

பத்தாம் வகுப்பு கணித தேர்வு கடினம் - நடத்தாத பாடத்தில் இருந்து கேள்விகள்? - நடத்தாத பாடத்திலிருந்து கேள்வியா

நேற்று நடைபெற்ற பத்தாம் வகுப்பு கணித தேர்வு கடினமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடத்தாத பாடத்தில் இருநது கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பத்தாம் வகுப்பு மாணவர்கள் பதற்றம் - நடத்தாத பாடத்திலிருந்து கேள்வியா!

author img

By

Published : May 25, 2022, 11:55 AM IST

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த கணித பாட தேர்வு கடினமாக இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை நடந்த தேர்வுகள், பெரிய அளவிற்கு மாணவர்களுக்கு கடினமாக இருக்கவில்லை. ஆனால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று (மே 24)நடந்த கணக்கு பாட தேர்வு கண்ணீரை வர வைத்து விட்டதாக ஆசிரியர்களே குமுறுகின்றனர்.

ஒரு மதிப்பெண் மற்றும் வரைபடம் போன்றவை தவிர்த்து மற்ற அனைத்து கேள்விகளும் மிக கடினமாக இருந்ததாக தெரிகிறது. ஐந்து மதிப்பெண் பகுதியில் 14 கேள்விகள் தரப்பட்டு, பத்து கேள்விகளுக்கு விடை எழுதவேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில் 42 வது கேள்வி பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. மேலும் 14 கேள்விகளில், 5 கேள்விகள் மட்டுமே விடையளிக்கும் வகையில் இருந்ததாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இரு மதிப்பெண் பகுதிகளில் 14 கேள்விகள் தரப்பட்டு, 10 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும் . இதிலும் 5 கேள்விகளுக்கு மட்டுமே விடையளிக்கும் வகையில் இருந்ததாகவும், மீதமிருந்த 10 கேள்விகளும் எழுத முடியாத அளவிற்கு இருந்ததாகவும் ஆசிரியர்களும், மாணவர்களும் தெரிவிக்கின்றனர்.

மேலும், 16வது கேள்வி நடத்தப்படாத பாடப் பகுதியிலிருந்து கேட்கப்பட்டுள்ளது. கரோனா காரணமாக பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடப் பகுதிகள் குறைக்கப்பட்டன. அதன்படி குறைக்கப்பட்ட பாடப் பகுதியிலிருந்து இந்த கேள்வி பெறாமல், நீக்கம் செய்யப்பட்ட பாடப் பகுதியிலிருந்து கேட்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

28 வது கேள்வி , பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டு இருப்பதும் ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒட்டுமொத்தமாக மாணவர்களை அதிர்ச்சி அடையச் செய்யும் வகையில் நேற்றைய கேள்வித்தாள் இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே, நேற்றைய தேர்வு குறித்தும், மாணவர்களின் பரிதாப நிலை குறித்தும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க:தந்தை இறந்த துக்கத்திலும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.