கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பல தரப்பினரும் கடும் இன்னல்களைச் சந்தித்தவருகின்றனர். குறிப்பாக, அன்றாட வருமானத்தை நம்பி மட்டுமே உள்ள அடித்தட்டு மக்களின் துயரம் சொல்லி மாளாது.
ஊரடங்கால் வேலையிழந்து தவிக்கும் தொழிலாளர்களுக்கு மனிதநேயம் கொண்ட பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்துவருகின்றனர்.
அந்தவகையில், திருவள்ளூரை அடுத்த புட்லூர் ஊராட்சியில் குடுகுடுப்பைக்காரர்கள், பூம் பூம் மாட்டுக்காரர்கள், பழங்குடியினர், இருளர்கள் என 156 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்.
இவர்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகள், முகக்கவசம் ஆகியவற்றை ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ், துணைச் செயலாளர் விஜயகுமார், புட்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் லோகம்மாள் கண்ணதாசன் உள்ளிட்டோர் வழங்கினர்.
நிவாரணத்தைப் பெற்றுக்கொண்ட குடுகுடுப்பைகாரர்கள், "நல்லகாலம் பொறக்குது... நல்லகாலம் பொறக்குது... கரோனாவை ஒழிக்க விரைவில் நல்ல காலம் பிறக்கப் போகுது" என ஆருடம் கூறினர்.
இதையும் படிங்க: நிவாரண நிதி பெற மலையேறிய மக்கள்