சென்னை: திருமங்கலத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தவர் மதிவாணன் (40). இவர் ஆன்லைன் வகுப்பின்போது மாணவர்களும், பெற்றோர்களும் உள்ள வாட்ஸ் ஆப் குழுவில் ஆபாச வீடியோ லிங்க்-ஐ அனுப்பியதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவர்களின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்த நிலையில், கணித ஆசிரியர் மதிவாணனிடம் பள்ளி நிர்வாகம் துறை ரீதியிலான விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் ஆபாச வீடியோ லிங்க்-ஐ வாட்ஸ் ஆப் குழுவில் அனுப்பியது தெரியவந்தது.
இதனையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில் ஆசிரியர் மதிவாணன் மீது திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அம்பத்தூரை சேர்ந்த கணித ஆசிரியர் மதிவாணன்-ஐ திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ராமநாதபுரம் மாவட்டத்தில் மிதமான மழை