சென்னை வள்ளுவர் கோட்டம் பேருந்து நிறுத்தம் அருகில் தேனீர் கடை நடத்தி வருபவர் பிரதீப். இவர் கடையில் நேற்று இரவு தேனீர் குடிக்க ஒருவர் வந்துள்ளார். அப்போது கடை உரிமையாளர் பிரதீப் வேறொரு வேலையாக வெளியில் சென்று மீண்டும் கடைக்குள் வந்து பார்த்தபோது, அடையாளம் தெரியாத அந்த நபர் பணப்பெட்டியில் இருந்த 4000 ரூபாயை திருடிச் சென்றுள்ளார்.
பின்னர் இது தொடர்பாக பிரதீப் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கடையிலிருந்த கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகளை வைத்து அந்த நபரைத் தேடி வருகின்றனர்.