புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், ஆகிய பண்டிகை காலங்களில் மதுபானம் விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், தமிழ்நாட்டில் போகிப் பண்டிகையான ஜனவரி 13ஆம் தேதி, 147 கோடி ரூபாய்க்கும், பொங்கல் பண்டிகையான நேற்று (ஜன. 14) 269 கோடி ரூபாய்க்கும் என, மொத்தமாக இரண்டு நாட்களில் 416 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இன்று திருவள்ளுவர் தினம் என்பதால், மதுபானக் கடைகளை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 200 கோடி ரூபாய்க்கு குறைவாக மதுபானம் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, மூன்று நாட்களில் ரூ.610 கோடிக்கு மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை!