ETV Bharat / city

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு - tomorrow weather forecast

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு

author img

By

Published : Apr 29, 2022, 4:22 PM IST

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, 'வளிமண்டல கீழடுக்குச்சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 1, 2, 3 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை: தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்

சென்னை வானிலை நிலவரம்: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தக்கலை (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி) தலா 3 செ.மீ , பெரியார் (தேனி) 2 செ.மீ, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) 1செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.

கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை’ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.