ETV Bharat / city

மாநில வளர்ச்சி மேம்பாட்டு குழு உறுப்பினர்களின் முழு விவரம் - மாநில வளர்ச்சி மேம்பாட்டு குழு உறுப்பினர்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மாநில வளர்ச்சி மேம்பாட்டு குழு உறுப்பினர்களின் முழு விவரத்தையும் இங்கு காணலாம்.

மாநில வளர்ச்சி மேம்பாட்டு குழு
மாநில வளர்ச்சி மேம்பாட்டு குழு
author img

By

Published : Jun 7, 2021, 2:30 AM IST

Updated : Jun 7, 2021, 6:34 AM IST

சென்னை: கடந்த 1971ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் மாநில திட்டக் குழு உருவாக்கப்பட்டது. இக்குழுவானது முதலமைச்சர் தலைமையின் கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் பரிந்துரைகள் அளிக்கப்படுகிறது. இந்த குழுவானது கடந்த 2020ஆம் ஆண்டில் மாநில வளர்ச்சி மேம்பாட்டு குழுவாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

இச்சூழலில், மாநில வளர்ச்சி மேம்பாட்டு குழுவை திருத்தியமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, பேராசிரியர் ஜெயரஞ்சன் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் ராம. சீனுவாசன் முழுநேர உறுப்பினராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவர் கு.சிவராமன், முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்ட 8 பேர் பகுதி நேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநில வளர்ச்சி மேம்பாட்டு குழு உறுப்பினர்களின் முழு விவரம்:

1. பேராசிரியர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன்

மாநில வளர்ச்சி மேம்பாட்டு குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of velopment Studies) முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டவர். கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு பொருளாதார மாற்றங்கள் குறித்து பல ஆய்வுப் பணிகளை மேற்கொண்டவர். 50-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை பிரபல ஆய்வு இதழ்களில் வெளியிட்டுள்ளார். பல்வேறு புதிய ஆய்வு நிறுவனங்களுக்காகவும், சர்வதேச வனங்களுக்காகவும் ஆய்வுகள் மேற்கொண்டவர்.

2. டி.ஆர்.பி. ராஜா, எம்.எல்.ஏ

டி.ஆர்.பி. ராஜா, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினராக மக்கள் பணியாற்றி வருகிறார். இவர் ஆலோசனை உளவியல் மற்றும் மேலாண்மைப் படிப்பில் (Counselling Psychology & Management) முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொது நிறுவனங்கள் குழுவின் உறுப்பினராகவும், மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினராகவும், பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும் அங்கம் வகித்தவர்.

3. சித்த மருத்துவர் கு. சிவராமன்

சித்த மருத்துவத்தில் பட்டமும், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சித்த மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். சித்த மருத்துவத்தை அறிவியல் பார்வையுடன் தர நிர்ணயம் செய்து, அதன் பயனை உலகெங்கும் பரவலாக்கியதிலும், உலகெங்கும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தமிழ் மருத்துவ முறையாக நகர்த்தியமைக்கும் பெரும்பங்கு வகித்தவர்.

15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுதானியங்களின் ஊட்டம் குறித்த பயன்பாட்டை, அதன் சூழலுக்கு இசைவான உழவு குறித்த பயனை, உலகெங்கும் பல தளங்களில் உரையாடி, வெகுசன ஊடகங்களில் கட்டுரைகளாகவும், காட்சி ஊடகங்களில் தெளிவுற உரைத்தும் இன்றும் சிறுதானியப் பயன்பாட்டை பெரிதும் உயர்த்தியதில், இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

"வாங்க வாழலாம்"- இவர் எழுதிய நூல், தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான விருதைப் பெற்ற நூல். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக "சிறந்த மருத்துவர் விருது", அமெரிக்காவின் ஃபெட்னா அமைப்பின் விருது, 2021 ஆண்டில் கனடா நாட்டு தமிழ்ச்சங்கத்தின் "தமிழ் மரபுக்காவலர் விருது" உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர்.

4. பத்மஸ்ரீ முனைவர் நர்த்தகி நடராஜ்

பத்மஸ்ரீ கலைமாமணி முனைவர் நர்த்தகி நடராஜ், தனது நளினமான நடனத்தினால் உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றவர். உலக அளவில் எண்ணற்ற விருதுகளும் பட்டங்களும் பெற்றவர். குறிப்பாக, இந்தியாவின் மிக உயரிய விருதான “பத்மஸ்ரீ" விருதைப் பெற்ற முதல் திருநங்கை நடனக் கலைஞர் இவர். மிகப்பழமையான தஞ்சாவூர் நடனமுறைகளை முதன்மையாகக் கொண்டு இவர் வழங்கி வரும் நடனம் வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

5. பேராசிரியர் ம. விஜயபாஸ்கர்

ம.விஜயபாஸ்கர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development Stuidies) பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பு (International Labour Organisation), ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் அவசரகால நிதியம் (United Nations Children's Emergency Fund -UNICEF), ஐக்கிய நாடுகளின் சமூக வளர்ச்சிக்கான ஆராய்ச்சி நிறுவனம் (The United Nations Research Institute for Social Development -UNRISD) ஆகியவற்றின் ஆலோசகராகவும் இருந்துள்ள இவர், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளியலுக்கான முனைவர் பட்டம் பெற்றவர்.

6. பேராசிரியர் டாக்டர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில்

டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில், சென்னையில் உள்ள லாபநோக்கமற்ற அமைப்பான சுற்றுச்சூழல் அறிவியல் அறக்கட்டளையின் முன்னாள் இயக்குநர், ஆலோசகர். அவர் 25 நவம்பர் 1974 முதல் புது கல்லூரியில் (The New College) விலங்கியல் பேராசிரியராக இருந்தார். பின்னர், அவர் விலங்கியல் துறையின் தலைவராகவும், பின்னர் உயிரி தொழில்நுட்பத் துறையின் தலைவராக சிறப்பாக செயல்பட்டவர்.

இவர் இந்திய மண்ணியல் உயிரியலாளர் மற்றும் சுற்றுச்சூழல் அறிஞர். ஒவ்வொரு பகுதியிலும் கிடைக்கும் மண்புழுக்களைப் பயன்படுத்தி மக்கும் கழிவுகளை மறுசுழற்சி தொழில் நுட்பங்களை மையமாகக் கொண்டு உரமாக மாற்றுவதிலும் மண் வளத்தைப் பெருக்குவதிலும் இவரது பங்களிப்பு அளவிடற்கரியது. 1994-95 ஆம் ஆண்டிற்கான CASTME விருது அவருக்கு இங்கிலாந்தில் வழங்கப்பட்டது. 2005 தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து சுற்றுசூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வுக்காக அறிஞர் அண்ணா விருது. ஜூன் 2018-இல் சீனாவின் முதலாவது உலக மண்புழு தொழில் மன்றத்தின் சிறப்பு பங்களிப்பு விருது, சென்னையின் சாம்பியன்-2019 (CHAMPION OF CHENNAI - 2019) விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.

7. மல்லிகா ஸ்ரீனிவாசன்

மல்லிகா ஸ்ரீனிவாசன், டிராக்டர் அண்டு ஃபார்ம் எக்யூப்மென்ட் லிமிடெட் (TAFE Limited) என்ற வேளாண் கருவிகள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். இவர் அங்கம் வகிக்கும் நிறுவனம், இந்திய வேளாண்மை வளர்ச்சிக்கு மிகப் பெரும்பங்கு ஆற்றி வருகிறது. ஆண்டு ஒன்றிற்கு 1 லட்சத்து 80 ஆயிரம் டிராக்டர்களை, ஏறத்தாழ 100 நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதார அளவியல் (Econometrics) பட்டப்படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றவர். 2014ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான "பத்மஸ்ரீ" விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

8. தீனபந்து, ஐஏஎஸ் (ஓய்வு)

தீனபந்து, 1982ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆவார். பொருளாதாரத்தில் எம்.ஏ, எம்பில்., பட்டங்கள் பெற்ற இவர், இந்திய ஆட்சிப் பணியில் பணியில் சேருவதற்கு முன்பாக, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் தலைமை அலுவலகத்தில் பொருளாதார ஆய்வுத் துறையில் பணியாற்றியவர். தமிழ்நாடு அரசில், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, குடிநீர் வாரியம், கல்வித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர்.

இவரது பணிக்காலத்தில், இலங்கை அகதிகளுக்கு வீட்டு வசதித் திட்டம், கல்வி உதவித்தொகைத் திட்டம், சென்னை மாநகராட்சி எல்லை விரிவாக்கம், ராமநாதபுரம் - ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம், அனைத்து நகராட்சிகளிலும் பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட முக்கியப் பணிகள் நடைபெற்றன.

9. மருத்துவர் ஜோ.அமலோற்பவநாதன்

மருத்துவர் ஜோ. அமலோற்பவநாதன், 1986ஆம் ஆண்டு ஒரு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராக அரசுப் பணியில் சேர்ந்து, 30 ஆண்டுகளாக பணிபுரிந்து, சென்னை மருத்துவ கல்லூரி ரத்த நாள அறுவை சிகிச்சை துறை பேராசிரியர், இயக்குநராகப் பணி ஓய்வு பெற்றவர் ஆவார்.

கடந்த 2008ஆம் ஆண்டு அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி உருவாக்கிய உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்று சுமார் எட்டு ஆண்டுகள் அந்தத் திட்டத்தை நிறைவேற்றியவர் ஆவார். இத்திட்டம் இந்தியாவின் முன்னோடி என பல இந்திய, சர்வதேச பத்திரிகைகள் பாராட்டின. உலக புகழ் பெற்ற பிரிட்டீஷ் மருத்துவ இதழ் (British Medical Journal) இத்திட்டத்தை பாராட்டி ஒரு கட்டுரை எழுதியது முக்கியமான ஒன்றாகும்.

10. பேராசிரியர் இராம. சீனுவாசன்

பேராசிரியர் இராம. சீனுவாசன் சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதார அளவியல் துறையில் பேராசிரியராக உள்ளார். பொருளியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்று 30 ஆண்டுகளாக கல்லூரி, பல்கலைகழக ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

2006-2011 ஆகிய ஐந்து ஆண்டுகள் தமிழ்நாடு அரசின் திட்டக்குழுவில் உறுப்பினராக இருந்தார். அதில் முதல் இரண்டு ஆண்டுகள் முழுநேர உறுப்பினராக இருந்தார். 2017-2020 ஆகிய மூன்று ஆண்டுகள் சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளராகப் பணியாற்றினார். தற்போது சென்னை பல்கலைக்கழத்தின் பொருளாதார அளவியல் துறையில் பேராசிரியராகவும், துறை தலைவராகவும், பல்கலைக்கழக ஆராய்ச்சி பிரிவு டீன் மற்றும் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினராக உள்ளார்.

இதையும் படிங்க: மரபு வேளாண் உத்திகள் தமிழ்நாட்டில் முழுவீச்சில் செயல்படுத்தப்படும் - கு. சிவராமன்

Last Updated : Jun 7, 2021, 6:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.