ETV Bharat / city

'பள்ளிக்கல்விக்கு நிதி தாருங்கள்' - நிதியமைச்சரை சந்திக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் - Finanace minister PTR

பள்ளிக்கல்வித் துறைக்கு நிதி கேட்டு அன்பில் மகேஷ் நிதியமைச்சரை சந்திக்க உள்ளார்.

Etv Bharat'பள்ளிக்கல்விக்கு  நிதி தாருங்கள்' -  நிதியமைச்சரை சந்திக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
Etv Bharat'பள்ளிக்கல்விக்கு நிதி தாருங்கள்' - நிதியமைச்சரை சந்திக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்'பள்ளிக்கல்விக்கு நிதி தாருங்கள்' - நிதியமைச்சரை சந்திக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
author img

By

Published : Sep 1, 2022, 3:06 PM IST

சென்னை: அதிருப்தியில் உள்ள ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தீவிரம் காட்டி வருவதுடன், நிதி அமைச்சரை சந்தித்து 15 கோரிக்கைகள் தொடர்பாகப் பேச முடிவு செய்துள்ளார். திமுக ஆட்சியில் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியிடத்தையும் தனியாருக்கு தாரை வார்க்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இணைந்து ஜாக்டோ ஜியோ என்ற அமைப்பினை உருவாக்கி தங்களின் கோரிக்கைக்காக போராடி வந்தனர். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேரில் சந்தித்து, பல்வேறு வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என வாக்குறுதி அளித்தனர்.

திமுக அரசு பதவியேற்றதற்குப்பின், பல துறைகளில் பலவகையான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் , பள்ளிக் கல்வித் துறையில் பெரிதாக எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் ஆசிரியர்களிடம் பெரும் அதிருப்தி நிலவி வருகிறது.

ஜாக்டோ ஜியோ மாநாடு:இந்நிலையில், செப்டம்பர் 10ஆம் தேதி ஜாக்டோ ஜியோ நடத்தும் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். இந்த மாநாட்டிற்கு முன்னதாக ஆசிரியர்கள் வலியுறுத்திய பல கோரிக்கைகளில் சில கோரிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக நிதி அமைச்சரை சந்தித்து, பள்ளிக்கல்வி அமைச்சர் 15 வகையான கோரிக்கைகளை வலியுறுத்துவதற்கு சந்திக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதில் முக்கியமாக அதிகளவில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியை விடுவிக்கும்படி கேட்க உள்ளனர். அதில் முறையான நியமனம் செய்ய இறுதிப்பட்டியலில் உள்ள விடுபட்டுப்போன 171 தொழிற்கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது, எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை கூடுதல் ஆசிரியர்களை பணி நியமனம் செய்வது, அரசு மாதிரிப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது, அரசாணை 101 மற்றும் 108 ஆகியவற்றை சீரமைப்பு செய்வது, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமனம் செய்வது, அரசுப்பள்ளிகளில் 2500 வகுப்பறைகளைக்கட்டுவது உள்ளிட்டப்பொருள்கள் நிதி அமைச்சர் உடனான சந்திப்பின் போது இடம் பெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி: மேலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான லேப்டாப் திட்டம், உதவிபெறும் பள்ளிகளில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணியிடங்கள், 15 தகைசால் பள்ளிகள் தொடங்குவதற்கான நிதி, தமிழ்வழியில் இயங்கும் சுயநிதிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குதல்,

அரசுப் பள்ளிகளில் தூய்மைப் பணியாளர்களை தனியார் நிறுவனம் மூலம் பணி அமர்த்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. நிதி அமைச்சருக்கும், பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கும் இடையேயான சந்திப்பு விரைவில் நடைபெறும் எனத்தெரிகிறது.

ஆசிரியர்கள் முக்கியமாக எதிர்பார்க்கும் கோரிக்கைகளில் ஒன்றான, அதிமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட அரசாணைகள் 101 ,108ஐ ரத்து செய்வது என்ற கோரிக்கை, நிதி அமைச்சர் உடனான சந்திப்பின் போது வலியுறுத்தப்பட இருக்கிறது.

ஜாக்டோ ஜியோ அமைப்பின் முக்கியக் கோரிக்கைகளான பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம், சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளோ, பழைய ஓய்வூதியத்திட்டம் மீண்டும் கொண்டு வருவது தொடர்பான கோரிக்கையோ இந்தப் பேச்சுவார்த்தையின்போது இடம்பெறாது எனத்தெரிகிறது.

மேலும் திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அரசில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனக் கூறிவிட்டு, தற்பொழுது தூய்மைப் பணியாளர்கள் பணியிடத்தையும் தனியாருக்குத் தாரை வார்க்கத் திட்டமிட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க:சேலம் 8 வழி சாலையை திமுக ஆதரிப்பது வரவேற்கத்தக்கது... இணை அமைச்சர் எல். முருகன்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.