"தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல், பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் வருகின்ற 15.03.2022 ஓரிரு இடங்களில் லேசான,மிதமான மழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 16.03.2022 ஓரிரு இடங்களில் லேசான,மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 20 நாள் சிறை வாசத்திற்கு பின் ஜெயக்குமார் விடுதலை.. விண்ணை பிளந்த அண்ணன் DJ வாழ்க கோஷம்..