ETV Bharat / city

காமராஜர் பெயர் பலகை சூட்டக்கோரி ஆர்ப்பாட்டம்! - தமிழ்நாடு நாடார் சங்கம் போராட்டம்

சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து நீக்கப்பட்ட காமராஜர் பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காமராஜர் பெயர் பலகை: தமிழ்நாடு நாடார் சங்கம் வைத்த கோரிக்கை

author img

By

Published : Apr 1, 2022, 2:13 PM IST

சென்னை: உள்நாட்டு விமான நிலைத்திற்கு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பெயர் ஏற்கெனவே சூட்டப்பட்டது. இந்நிலையில் விரிவாக்கப் பணிக்காக உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்த சென்னை காமராஜர் உள்நாட்டு விமான நிலையம் என்கிற பெயர் பலகை அகற்றப்பட்டது.

தற்காலிகமாக அகற்றப்படுவதாகவும், வேலை முடிந்த பிறகு மீண்டும் காமராஜர் பெயர் பலகை வைக்கப்படும் என சென்னை விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர். ஆனால், இதுவரை காமராஜர் பெயர் பலகை வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து காமராஜர் பெயர் பலகையும் அவரது உருவப்படத்தையும் வைக்க வேண்டுமென தமிழ்நாடு நாடார் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

போராட்டம்: இந்த நிலையில் சென்னை விமான நிலைய ஆணையம் காமராஜர் பெயர் பலகையும், படத்தையும் வைக்காததைக் கண்டித்து இன்று (ஏப்.01) தமிழ்நாடு நாடார் சங்கம் மற்றும் நாடார் அமைப்புகள் இணைந்து 500க்கும் மேற்பட்டோர் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு நாடார் சங்கத்தினர் விமான நிலைய முற்றுகை போராட்டம்

இதையடுத்து தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் தனபால் சென்னை விமான நிலைய ஆணையத்தின் இயக்குநர் சரத்குமாரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர். பின்னர் விமான நிலைய இயக்குநர் விரைவில் காமராஜரின் பெயர் பலகையும், படத்தையும் வைப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.

கோரிக்கை: பின்னர் செய்தியாளர்களிடம் நாடார் சங்கத் தலைவர் முத்து ரமேஷ் கூறுகையில், 'சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் காமராஜர் பெயர் பலகையும், காமராஜரின் உருவப்படத்தையும், அவரது சிலையும் விமான நிலையத்தில் நிறுவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளோம்.

சென்னை வரும் அனைத்து விமானங்களிலும் காமராஜர் விமான நிலையம் என ஒலிப்பான்கள் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். அனைத்துக் கோரிக்கைகளும் ஆலோசனை செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என சென்னை விமான நிலைய இயக்குநர் தெரிவித்தார்.

இன்னும் ஒருவாரத்தில்: எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர், இந்திய விமான நிலைய ஆணையர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். பெயர்பலகை இன்னும் ஒருவாரத்தில் வைக்கவில்லை என்றால் மே 20ஆம் தேதி தமிழ்நாடு நாடார் சங்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும்' எனக் கூறினார்.

இதையும் படிங்க: ''மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைவிட கவுன்சிலிங் கொடுப்பதே சரியானது' - திருச்சி ஆட்சியர்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.