இதுதொடர்பாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
”ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான தர்பார் திரைப்படத்தில், காசு இருந்தால் சிறைக்கைதி கூட ஷாப்பிங் போகலாம் என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உண்மைக்கு புறம்பான தகவலை தனது படத்தின் மூலம் தெரிவித்து இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பெங்களூர் சிறை விவகாரம் தொடர்பாக தனிநபர் விசாரணை நடத்திய வினய்குமார் ஐபிஎஸ்., சசிகலா ஷாப்பிங் சென்று வந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று, பெங்களூர் சிறைத்துறை ஐஐியாக இருந்த ரூபாவும், சசிகலா சிறையை விட்டு வெளியே சென்று வந்ததாக தான் கூறவில்லை என ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். உண்மை இப்படி இருக்க தவறான தகவலை மக்களிடம் விதைக்கும் செயலில் இயக்குநர் முருகதாஸ் ஈடுபட்டிருக்கிறார். ஆகவே, தர்பார் திரைப்படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கிவிட்டு இயக்குநர் முருகதாஸ், நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பு நிறுவனம் சார்பில் பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும்.
தமிழக அமைச்சர் ஜெயக்குமாரும், தர்பார் திரைப்படத்தில் பணம் பாதாளம் வரைக்கும் பாயும், அதேசமயத்தில் பணம் சிறைச்சாலை வரைகூட பாயும் என்று சசிகலாவை சுட்டிக்காட்டி படம் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இந்தக் கருத்தை அமைச்சர் ஜெயக்குமார் திரும்பப் பெறாவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் ” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ’சசிகலாவை தர்பார் படத்தில் விமர்சித்தது சரிதான்’ - அமைச்சர் ஜெயக்குமார்