ETV Bharat / city

தமிழ்நாடு அரசு பணியிடங்கள் தமிழர்களுக்கே -பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் - தமிழக அரசு பணியிடங்கள் தமிழர்களுக்கே

தமிழ்நாடு அரசு பணியிடங்கள் தமிழர்களுக்கே என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

author img

By

Published : Jan 7, 2022, 2:21 PM IST

சென்னை: 2016இல் வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் எழுதும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், இது தமிழர்களுக்கு விரோதமான செயல் என சட்டப்பேரவை உறுப்பினர் வேல்முருகன் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “மாநில மற்றும் பொது நிறுவனங்களில் உள்ள பணியிடங்களை தமிழர்களைக் கொண்டு நிரப்புவதற்கான அரசாணை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளிமாநிலத்தார் பணிகளில் டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் மூலம் தேர்வு எழுதும் முறையை படிப்படியாக மாற்றங்கள் கொண்டுவரப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும், “வரும் மார்ச் மாதம் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனவும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு அரசு தேர்வுகள் டிஎன்பிஎஸ்சி மூலமாக மட்டுமே நடத்தப்படும்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.