ETV Bharat / city

மெய்நிகர் மாரத்தானில் 19,596 பேர் பங்கேற்பு: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

author img

By

Published : Sep 3, 2021, 11:06 AM IST

கருணாநிதி நினைவு பன்னாட்டு இரண்டாவது ஆண்டு மெய்நிகர் மாரத்தானில் 19 ஆயிரத்து 596 பேர் பங்கேற்றதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை: கருணாநிதி நினைவு பன்னாட்டு (இணையவழி) இரண்டாவது ஆண்டு மெய்நிகர் மாரத்தான் குறித்து அமைச்சர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “கருணாநிதியின் 3ஆம் ஆண்டு நினைவு நாளில், கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தானை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆக.07ஆம் தேதி மாலை 5 மணியளவில் கலைஞர் நினைவிடத்தில் தொடங்கி வைத்தார்.

இந்த மாரத்தான், ஆக.7 முதல் ஆக.31ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் 36 உலக நாடுகளிலிருந்தும், இந்தியாவின் நான்கு மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் 34 மாவட்டங்களிலிருந்தும் 19 ஆயிரத்து 596 பேர் பங்கேற்றனர்.

கலைஞரின் உருவம் பதித்த பதக்கம்

5 கி.மீ., தூரத்துக்கு மாரத்தானில் அவரவருக்கு பிடித்த இடத்தில் அவர்களின் ஓடும் திறனுக்கு ஏற்ற தூரத்தை தேர்வு செய்து ஓடி முடித்த பிறகு தாங்கள் அதனைப் பதிவு செய்து, அதனை இணையத்தின் வாயிலாக போட்டியை நடத்தும் குழுவினருக்கு அனுப்பி வைப்பதே இந்த மெய்நிகர் மாரத்தான் போட்டியின் வழிமுறையாகும்.

இந்த முறையைப் பின்பற்றி மாரத்தானில் பங்கேற்று ஓடியவர்கள், அதற்கான சான்றுகளை இணையத்தின் வழியே கலைஞர் நினைவு மாரத்தான் இணையதளத்தில் அனுப்பி வைத்தனர். அவை பரிசீலிக்கப்பட்டு போட்டியில் குறிப்பிட்டதொரு அளவுகளில் முழுமையாக ஓடி முடித்தவர்களுக்கு இணையதளத்தின் வாயிலாக சான்றிதழ்களும், கலைஞரின் உருவம் பதித்த பதக்கங்கள் அஞ்சல் வழியாகவும் அனுப்பி வைக்கப்பட்டன.

கரோனா நிவாரண நிதி

19 ஆயிரத்து 596 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த மாரத்தானில் பதிவுக் கட்டணமாக 300 ரூபாய் பெறப்பட்டது. அதில், சேவை வரி நீங்கலாக கிடைத்திருக்கிற 56 லட்சத்து இரண்டாயிரத்து 693 ரூபாயினை தமிழ்நாடு முதலமைச்சரிடம் கரோனா தடுப்பு நிவாரண நிதியாக வழங்க இருக்கிறோம்.

இந்தக் கரோனா பேரிடர் காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இணைய வழியாக நடத்தப்பட்ட ‘கலைஞர் மெய்நிகர் மாரத்தான்’ போட்டியில் பங்கேற்று புதிய உலக சாதனை படைத்துள்ளனர். இந்தச் சாதனை முத்தமிழ் அறிஞர் கலைஞர் மீது உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்கள் வைத்துள்ள பெருமதிப்பை பறைசாற்றியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கருணாநிதி 3ஆம் ஆண்டு நினைவு நாள்: 2ஆவது ஆண்டு மெய்நிகர் மாரத்தான் போட்டிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.