ETV Bharat / city

’சசிகலாவை தர்பார் படத்தில் விமர்சித்தது சரிதான்’ - அமைச்சர் ஜெயக்குமார் - தர்பார்

சென்னை: சசிகலா தொடர்பாக தர்பார் திரைப்படத்தில் விமர்சித்து காட்சிகள் வைத்தது வரவேற்கக்கூடியதுதான் என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

jayakumar
jayakumar
author img

By

Published : Jan 9, 2020, 1:23 PM IST

ராயபுரத்தில் நியாயவிலைக் கடைகளில் இன்று பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “பொங்கல் பரிசுத்தொகுப்பு நான்கு நாள்களுக்குத் தொடர்ந்து, காலை ஒன்பது மணிமுதல் இரவு ஏழு மணிவரை வழங்கப்படும். ஒரு கடையில் 300 பேர் வீதம் தினசரி வழங்கப்படுகிறது.

பணம் பாதாளம்வரை பாயும் என்பார்கள். ஆனால், பணம் சிறைச்சாலைவரை பாய்ந்திருக்கிறது. தர்பார் படத்தில் வரும் ஒரு காட்சி, சசிகலாவை பற்றிய கருத்தாக இருக்கும் என எண்ணுகிறேன். இது நல்ல கருத்துதான். பணமிருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராகத் திரைப்படம் வாயிலாக இதுமாதிரியான கருத்துகள் வருவது வரவேற்கக்கூடியதுதான்.

தர்பார் படத்தையும், பிகில் படத்தையும் நாங்கள் ஒரே கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறோம். எங்களுக்கு எந்த வேறுபாடும் கிடையாது. அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்புக் காட்சி திரையிடலுக்கான அனுமதியை அலுவலர்கள் வழங்குகின்றனர்“ என்றார்.

’பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள் ஆனால் சிறைச்சாலை வரை பாய்ந்திருக்கிறது’

இதையும் படிங்க: 'தர்பார்' வெளியீட்டுக்கு 1,370 இணையதளங்களுக்கு தடை - சென்னை உயர் நீதிமன்றம்

Intro:தர்பார் பட கருத்துக்கள் சமூகத்திற்கு தேவைதான் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டிBody:சென்னை ராயபுரத்தில் இன்று பொதுமக்களுக்கு பொங்கல் பரிசினை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார் அதன் பின் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது

பொங்கல் பரிசு 4 நாட்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை வழங்கப்படும் ஒரு கடையில் 300 பேருக்கு தினசரி வழங்கப்படுகிறது பொதுமக்கள் காலையிலேயே வரவேண்டாம் இரவு 7 மணி வரை வழங்கப்படுவதால் பொறுமையாக வந்து வாங்கி செல்லுங்கள் பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்

தர்பார் படத்தில் உள்ள கருத்துக்களை நானும் கேள்விப்பட்டேன் பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள் ஆனால் படம் சிறைச்சாலை வரை பாய்வதாக கருத்து உள்ளது இந்த கருத்து நல்ல கருத்துதான் இது சசிகலாவை பற்றிய கருத்தாக இருக்கும் என எண்ணுகிறேன் இது நல்ல கருத்து இதற்குமேல் இதை பற்றி கூற விரும்பவில்லை பொதுமக்களுக்கு வரவேற்கக் கூடிய கருத்துதான் தர்பார் படத்தையும் பிகில் படத்தையும் நாங்கள் ஒரே கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறோம் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி அதிகாரிகள் வழங்குகின்றனர் எங்களுக்கு இரண்டும் ஒன்றுதான் எனக் கூறினார்Conclusion:தர்பார் பட கருத்துக்கள் சமூகத்திற்கு தேவைதான் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.