ETV Bharat / city

' ஸ்டாலின் ஒன்றும் காந்தியும் இல்லை; நான் ஒன்றும் புத்தனும் இல்லை ' - எகிறிய அமைச்சர் சி.வி. சண்முகம்

சென்னை: தேர்தல் ஆணையத்தை திமுக மிரட்டுவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

shanmugam
shanmugam
author img

By

Published : Dec 16, 2019, 1:48 PM IST

Updated : Dec 16, 2019, 2:41 PM IST

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ' உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என திமுக சதி செய்து, அடுத்தடுத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தும் உச்ச நீதிமன்றம் தகுந்த பதிலடியை தந்துவிட்டது. ஆனாலும், தேர்தல் ஆணையத்தை மிரட்டும் வகையில் திமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அரசைப் பற்றி விமர்சிக்க திமுக தலைவருக்கு எந்தவித அருகதையும் இல்லை. தனிப்பட்டமுறையில் என்னைப் பற்றிப் பேச அவர் ஒன்றும் காந்தியும் கிடையாது, நான் புத்தனும் கிடையாது. அப்படிப் பேசிக் கொள்ள வேண்டும் என்றால் மேடை அமைத்து பேச நான் தயார். நான் ஊர் பெயர் தெரியாதவன் எனக்கூறும் முரசொலிதான் மூன்றாம் தரமானது. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஸ்டாலினுக்கு நாவடக்கம் முக்கியம் ' என்று ஆவேசமாகப் பேசினார்.

சி.வி. சண்முகம், சட்டத்துறை அமைச்சர்

தொடர்ந்து, குடியுரிமைச் சட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் ஏதும் கூறாமல் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் அமைதியாகச் சென்றார்.

இதையும் படிங்க: ’சம்மட்டி அடி எங்களுக்கு இல்லை, அதிமுகவிற்கு மரண அடி’ - ஸ்டாலின் பதிலடி!

Intro:Body:ஸ்டாலினுக்கு ஆவேசம்; சி ஏ பி க்கு அமைதி

அமைச்சர் சிவி சண்முகம்

சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரது செய்தியாளர்களிடம் பேசுகையில்,

திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கூடாது என நீதிமன்றத்தில் தொடர்ந்த முறையீட்டு மனு தள்ளுபடி ஆனது. அதைத் தொடர்ந்து மீண்டும் கோர்ட்டை நாடிய திமுகவிற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தகுந்த பதிலடியை தந்துவிட்டார்.

அரசை பற்றி விமர்சிக்க திமுக தலைவருக்கு எந்தவித அருகதையும் இல்லை.

உச்சநீதிமன்றம் தேர்தலுக்கு எந்தவித தடையும் இல்லை என்று கூறிய பிறகும் மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவது தேர்தலை நடத்தக் கூடாது என அவர்கள் செய்யும் சதி என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் தன் தகுதிக்கு ஏற்பவும் பதவிக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும்.

என்னைப் பற்றி விமர்சிக்க தகுதியும் தராதரமும் ஸ்டாலினுக்கு கிடையாது.

இவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது. அவரைப் பற்றி தனிப்பட்ட முறையில் பேச வேண்டும் என்றால் ஆண்டு முழுவதும் பேசலாம்.

தனிப்பட்டமுறையில் என்னை பற்றி பேச அவர் ஒன்றும் காந்தி கிடையாது. நான் புத்தனும் கிடையாது.

தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்ள வேண்டும் என்றால் மேடை அமைத்து பேச நான் தயார்.

நான் ஊர் பெயர் தெரியாதவன் எனக்கூறும் உனது பத்திரிகை முரசொலி தான் மூன்றாம் தரமானது.

நான் தமிழ் நாட்டின் குடிமகன். உங்கள் தலைவர் எந்த ஊர் என்று தெரியுமா?

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் உங்களுக்கு நாவடக்கம் முக்கியம் என்று ஆவேசமாக பேசினார்.

தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து கேள்வி எழுப்பிய போது பதில் எதுவும் கூறாமல் அமைதியாக சென்றார். Conclusion:
Last Updated : Dec 16, 2019, 2:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.