ETV Bharat / city

நதிநீர்ப் பங்கீடு: தமிழ்நாடு, கேரள அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை - தமிழக அரசு

சென்னை: நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு, கேரள அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்றது.

inter state
inter state
author img

By

Published : Dec 12, 2019, 4:33 PM IST

தமிழ்நாடு, கேரளா இடையே நீர்ப் பங்கீடு சிக்கல்கள் பலகாலமாக இருந்து வருகிறது. எனவே, இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நீர்வளத்துறை அதிகாரிகள் அடங்கியக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் இன்று தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

தமிழ்நாடு - கேரளா இடையே நடந்த பேச்சுவார்த்தை

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த, தமிழ்நாடு குழுவுக்குப் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன்,

' பரம்பிக்குளம் - ஆழியாறு ஒப்பந்தத்தை இருமாநில மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் செயல்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சுமுகமாக இந்தக் கூட்டம் நடந்தது. பல்வேறு தொழில்நுட்ப விஷயங்கள் குறித்து விவாதித்தோம். கேரளாவிற்கு வழங்க வேண்டிய நீரைத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். வறட்சி காலங்களில் பற்றாக்குறை ஏற்படும் போதுதான் சிக்கல் ஏற்படுகிறது. பரம்பிக்குளம் - ஆழியாறு விவகாரத்தில் மக்களுக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டின் எண்ணம். அடுத்தக் கூட்டத்தை வரும் ஜனவரி மாத இறுதியிலோ அல்லது பிப்ரவரி மாதத் தொடக்கத்திலோ கேரளாவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

மணிவாசன், பொதுப்பணித்துறைச் செயலாளர்

முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அதுகுறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.

இதையும் படிங்க: முதலமைச்சரைச் சந்திக்க விவசாயிகள் சென்னை பயணம்

Intro:Body:தமிழகம் கேரளா நீர் பங்கீடு தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் முதல் கூட்டம் சென்னை தனியார் விடுதியில் நடந்தது. தமிழக குழுவுக்கு பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

பரம்பிக்குளம் ஆழியாறு ஒப்பந்தத்தை இருமாநில மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
அடுத்த கூட்டம் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் கேரளாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பல்வேறு தொழில்நுட்ப விஷயங்கள் குறித்து விவாதித்தோம். சுமூகமாக கூட்டம் நடைபெற்றது. கேரளாவிற்கு வழங்க வேண்டிய நீரை தொடர்ந்து வழங்கி வருகிறோம். பரம்பிக்குளம் - ஆழியாறு வழக்கு என்பதை விட மக்களுக்கு நன்மை நடக்க வேண்டும். வறட்சி காலங்களில் பற்றாக்குறை ஏற்படும்போதுதான் சிக்கல் ஏற்படுகிறது. முல்லை பெரியார் விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அதுகுறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.