சென்னை: இதுகுறித்து மாநில தகவல் ஆணையர் சு.முத்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, மாநில தகவல் ஆணையத்தை சேர்ந்த வி. முருகேஷ் என்பவர் சென்னையில் மழை நீரால் சாலைகளில் தண்ணீர் தேங்கி, மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியதால், சீரமைக்க கோரி மனு அனுப்பியுள்ளார்.
மேலும் அதனடிப்படையில் இவ்வாணையத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள சாலைகள் மற்றும் பாலங்கள் துறையின் தலைமை பொறியாளர், சென்னை மாநகராட்சி 23.08.2021 நாளிட்ட அறிக்கையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதியரசரின் இல்லம் முன்பு 5 மீட்டர் அகலத்திற்கு இருக்க வேண்டிய வேகத்தடை 7.5 மீட்டராகவும் மற்றும் 10 செ.மீ. இருக்க வேண்டிய வேகத்தடை 17 செ.மீ அளவுக்கு உயரமாக உள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
வார்டு -173, மனுதாரர் தகவல் கோரியுள்ள கிரின்வேஸ் சாலைப்பகுதி சட்டப்படி அமைக்கப்பட்டுள்ளதா என்ற தகவல் பெறுவதற்காக தலைமைபொறியாளர், (சாலைகள் பாலங்கள்) சென்னை பெருநகரமாநகராட்சி அவர்களிடத்தில், கிரின்வேஸ் சாலை மண்டலம் - 13, டாக்டர்.டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசரின் அரசு வீட்டிற்கு முன்பாக இருக்கின்ற சாலை மற்றும் வேகத்தடையானது சரியான அளவுகளின்படி , சரியாக இருக்கின்றதா என்பதன் ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
சாலை IRC- விதியின் படி , வேகத்தடையின் அளவானது 5 மீட்டர் அகலத்திற்கு 10 செ.மீ. உயரம் இருக்க வேண்டும் . ஆனால் , வேகத்தடையானது 7.50 மீட்டர் அகலத்திற்கு 17 செ.மீ உயரமாக உள்ளது . தமிழ்நாட்டின் தலைமை நீதியரசரின் வீட்டின் முன்பாக உள்ள அந்த சாலையிலேயே உள்ள வேகத்தடையில் விதிமீறல்கள் இருப்பதால் , காமராஜர் சாலை , அண்ணா சாலை , மற்றும் தெருக்களில் உள்ள சாலைகள் உட்பட மற்ற சாலைகள் அனைத்தும் எவ்வாறு இருக்கும் என்பதை ஆய்வு செய்வது மிக அவசியம் ஆகிறது.
அரசாங்கம் மற்றும் நீதிமன்றத்தாலும், அதிகாரிகளுக்கும் , எடுப்பவர்களுக்கும் , ஏற்கனவே இருக்கின்ற சாலைகளை எடுத்துவிட்டு , சாலை உயரம் அதிகரிக்கப்படாமல் சாலை வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
மீண்டும் மீண்டும் இந்த தவறு நடைபெறக் காரணமாக இருப்பதை சாலை வேலை நடைபெறும் இடங்களில் விசாரிக்கும்பொழுது , ஏற்கனவே உடைந்த சாலையை தோண்டி எடுத்து விட்டு, மீண்டும் சாலை சீரமைக்கப்படவேண்டும் என்ற ஒரு விதி இருக்கின்றது என்பதெல்லாம் சாலை அமைக்கும் பணியாளர்களுக்கு தெரிவதில்லை.
ஒப்பந்தம் கொடுத்த அதிகாரிகளும் பணியில் இருப்பதில்லை . ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்களும் பணியில் இருப்பதில்லை.
பணியாளர்கள் அவர்களால் முடிந்த அளவில் சாலை அமைக்கும் பணியை செய்துகொண்டிருக்கிறார்கள் இது தான், எதார்த்த நடைமுறையாக இருந்து வருகின்றது என மனுதாரர் தெரிவித்தார்.
ஒப்பந்தம் தோண்டி அமைக்க அரசின் கட்டிடங்களாக, தனியார் கட்டிடங்களோ , சாலை உயரத்தை விட கீழே கட்டப்படுவதில்லை . சாலையிலிருந்து சற்று உயரத்தில் தான் அமைக்கப்படுகின்றது.
ஆனால், சாலை அமைக்கின்ற பொழுது ஏற்கனவே பழுதான சாலைகளை தோண்டி எடுத்துவிட்டு, புதிதாக சாலை அமைக்கப்படாமல் , ஏற்கனவே பழுதாக இருந்த சாலையின் மேலேயே மீண்டும் புதிதாக சாலை அமைக்கப்படுவதால், சாலைகள் மேடாகியுள்ளதால், வீடு, கட்டிடங்களை மக்கள் பயன்படுத்துவதில் மிகுந்த சிரமங்கள் ஏற்பட்டு மக்கள் படும் துயரம் சொல்லி தீராது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சாலைகள் துறை பொதுமக்களின் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் ( அரசு கட்டிடங்கள் உட்பட ) பாதிக்குமே என்ற எந்த பொறுப்புடைமையும் இல்லாமல் அலட்சியமாக சாலை அமைத்து சென்றுவிடுகிறார்கள் என புகார் எழுந்துள்ளது.
ஆனால், சாலை அமைப்பதற்கு பயன்படும் பணமானது , ( உதாரணமாக ) பொதுமக்கள் வீடுகள் வாங்கும்போது ( 7 + 4 = 11 ) ஒரு கோடி ரூபாய்க்கு வீடு வாங்கினால் ரூ .1 இலட்சம் பத்திரப்பதிவிற்காக மட்டுமே கட்டணம் செலுத்துகிறார்கள்.
மேலும், வாகனம் வாங்கினால் சாலையில் செல்லுவதற்கு சாலை வரி செலுத்துகிறார்கள். அந்த பணத்திலிருந்து தான் அரசு மாநகராட்சிக்கு மாநில நிதிப் பகிர்வு மானியம் ( Devolution of Fund } வழங்குகிறது.மாநகராட்சிக்கு சொத்துவரி, தொழில் வரி, உட்பட பொதுமக்கள் பல வரிகள் செலுத்துகிறார்கள். அந்த பணத்திலிருந்து தான் சாலைகள் அமைக்கப்படுகின்றன.
தமிழ்நாடு தகவல் ஆணையம்
இத்தகைய புகார்களை தொடர்ந்து தமிழ்நாடு தகவல் ஆணையம் வெளியிட்ட ஆணையில், பெருநகர சென்னை மாநகராட்சி என்ற பொதுஅதிகார அமைப்பிற்கு கீழ்க்கண்ட பரிந்துரைகளை தமிழ்நாடு தகவல் ஆணையம் வழங்குகின்றது
சென்னை பெருநகரமாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் , சாலைகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு & மழைநீர் வடிகால் கால்வாய்கள் கடந்த முறை செப்பனிடப்பட்ட அனைத்தையும் ,இராணுவத்தில்(Military Engineering Service) பணியாற்றி ஓய்வுபெற்ற , இப்பணிகளில் அனுபவம் மிக்க ராணுவ அதிகாரிகளை கொண்டு , ஆய்வு செய்து , ஆய்வின் அடிப்படையில் தவறாக உள்ள சாலைகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு மற்றும் வடிகால் கால்வாய்களை, ஏற்கனவே எந்த ஒப்பந்ததாரர் பணி செய்தார்களோ அதே ஒப்பந்ததாரர் அவரது சொந்த பணத்தில் மாற்றி சீரமைக்கவும் , அந்த பணிகள் சரியாக நடைபெறுகின்றதா என்பதை இராணுவத்தில் (Military Engineering Service)பணியாற்றி ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளை கொண்டு கண்காணிக்கவும் , உத்தரவிட ஆணையாளர் , பெருநகர சென்னை மாநகராட்சி , அவர்களுக்கு தமிழ்நாடு தகவல் ஆணையம் பரிந்துரை செய்கிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியை பொறுத்தவரையில் 200 வார்டுகள் உள்ளடக்கியதாகும் . அதில் ஒவ்வொரு வார்டுகளுக்கும் , தனித்தனியாக 200x1 = 200 , இராணுவத்தில்(Military Engineering Service) பணியாற்றி , பணியில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளை நியமித்தால் , குறுகிய காலத்திலேயே இப்பணிகளை முடித்து விட முடியும்.
இராணுவத்தில்(Military Engineering Service) பணிபுரிந்து ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளை நியமித்து , இந்த அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய பணப்பயன்களை , ஏற்கனவே , சரியாக சாலைகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு & வடிகால் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தவறான சான்றிதழ் வழங்கிய அதிகாரிகளிடமிருந்து பிடித்தம் செய்து கொள்ளவும் , மற்றும் இவ்வாறு பொறுப்புடைமை இல்லாமல் ( Accountability ) செயல்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் , தமிழ்நாடு தகவல் ஆணையம் பரிந்துரை செய்கின்றது .
ஏற்கனவே , இருக்கின்ற சாலைகளை தோண்டி எடுத்துவிட்டு , புதிய சாலை அமைக்காத காரணத்தால் , சரியாக அமைக்கப்படாத அச்சாலைகளையும் , சரியாக அமைக்கப்படாத மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் & வடிகால் கால்வாய்களையும் , மீண்டும் அதே ஒப்பந்ததாரர்களின் சொந்த செலவிலேயே அதே பணியை திரும்ப செய்வதற்கு , சென்னை மாநகராட்சியால் உத்தரவிடபட்டால் , ஒப்பந்ததாரர் தமிழகத்தில் உள்ள மற்ற அரசு ஒப்பந்ததாரரிடத்திலும் , பொறியாளர்கள் மற்ற பொறியாளர்களிடத்திலும் , பணியாளர்கள் மற்ற பணியாளர்களிடத்திலும் இந்த தகவலை தெரிவிப்பார்கள் . இதனால் தமிழகத்தில் அரசு ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள், மற்றும் பணியாளர்கள் சரியாக பணி செய்ய வாய்ப்பாக அமையும்.
இதையும் படிங்க:பிபின் ராவத் உள்ளிட்டோரை மீட்ட தீயணைப்புத் துறையினரின் துயரம் - செவிசாய்க்குமா அரசு?