சென்னை: சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "தேர் திருவிழாவில் குழந்தைகள் உள்பட 12 பேர் இறந்தது மன வருத்தை தருகிறது.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். அரசு கருணை அடிப்படையில் நிதி உதவி அளிக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் கவனமாக இருக்க வேண்டும்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் பள்ளிக்கு செல்லும் கலாசாரம் மாறி, சீர்கெட்டு உள்ளது. மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மாணவர்கள் ஆசிரியர்களுக்கு எதிராக நடந்து கொள்வது வருத்தம் அளிக்கிறது.
பெற்றோர் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தை கற்று தர வேண்டும், கவுன்சிலிங் தர வேண்டும். மாணவர்களை அடித்து திருத்த முடியாது. அறிவுரைதான் கூற வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தஞ்சாவூர் தேர் விபத்து... திமுக சார்பில் தலா ரூ. 2 லட்சம் நிவாரணம்...