ETV Bharat / city

Tamilnadu government school students increased: அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை உயர்வு

author img

By

Published : Dec 29, 2021, 5:40 PM IST

Tamilnadu government school students increased: தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் கடந்த கல்வியாண்டைவிட 1 முதல் 12ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் 6 லட்சத்து 73ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை உயர்வு  amilnadu government school students strength increased  corana situation makes parents moneyless in TN  நடப்பு கல்வியாண்டில் புதிய மாணவர்கள்  கரோனாவால் அதிகரித்த மாணவர் சேர்கை
நடப்பு கல்வியாண்டில் புதிய மாணவர்கள்

சென்னை:Tamilnadu government school students increased: கடந்த 2020-21 கல்வியாண்டில் அதற்கு முந்தைய கல்வியாண்டை விட 1 லட்சத்து 28ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக, அரசுப் பள்ளியில் சேர்ந்த நிலையில், நடப்புக் கல்வியாண்டில் மொத்தம் 6.73 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மாணவர்களுக்கான கற்றல் சூழ்நிலை மற்றும் உயர் கல்வி சேர்க்கையில் ஏற்படும் பாதிப்பு போன்றவை காரணமாகத் தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இதனால் பல இடங்களில் அரசுப்பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தினால் பெற்றோர் தங்களின் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்துள்ளனர்.

நடப்புக் கல்வியாண்டில் புதிய மாணவர்கள்

அரசுப் பள்ளிகளில் நடப்பு 2021-2022ஆம் கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

கடந்த கல்வியாண்டில் 46லட்சத்து 50ஆயிரத்து 671ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை, 53 லட்சத்து 24ஆயிரத்து 009 ஆக அதிகரித்துள்ளது . இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 6 லட்சத்து73 ஆயிரத்து 338அதிகம் ஆகும்.

அந்த வகையில் 1ஆம் வகுப்பில் மட்டும் நடப்புக் கல்வியாண்டில் 3லட்சத்து 93ஆயிரத்து 285 மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கரோனாவால் அதிகரித்த மாணவர் சேர்கை

கடந்த 2ஆண்டுகளில் கரோனாவால் பொது மக்களின் பொருளாதாரச் சூழலில் ஏற்பட்ட தாக்கத்தினால், தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் செலுத்தும் வலிமை குறைந்து, பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க காரணமாக முன்வைக்கப்படுகிறது.

மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், உபரி ஆசிரியர் பிரச்னை தீர்க்கப்படுவதுடன் அரசுப் பள்ளிகள் மூடப்படுவதும் தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் 37ஆயிரத்து 554 அரசுபள்ளிகளில் 53லட்சத்து 24ஆயிரத்து 9 மாணவர்கள் தற்பொழுது படித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:மனைவியை பிரிந்த டி.இமான் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.