இதுதொடர்பாக, தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அனைத்து பள்ளிகளுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், நமது நாட்டின் 74ஆவது சுதந்திர தின விழாவினை, வரும் 15.08.2020 அன்று தொடக்கக்கல்வி இயக்குநர் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வகை பள்ளிகளில், பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி எளிய முறையில் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
வழிகாட்டு நெறிமுறைகள் :
- அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து கல்வி அலுவலகங்களிலும் சுதந்திர தின விழாவினை எளிமையான முறையில் கொண்டாடுதல் வேண்டும்.
- அனைத்து வகைப் பள்ளிகளிலும் தேசிய கொடியினை ஏற்றி விழாவினை கொண்டாட வேண்டும்.
- கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் முன்களப் பணியாளர்களாக செயல்படும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் சேவையினை பாராட்டும் பொருட்டு, அவர்களை மேற்படி விழாவிற்கு அழைத்து சிறப்பிக்க வேண்டும்.
- கரோனா தொற்று ஏற்பட்டு முழுவதும் குணமடைந்தோரையும் மேற்படி விழாவிற்கு அழைக்க வேண்டும்.
- சுதந்திர தின விழாவின்போது, கரோனா தொற்று பாதுகாப்பு, தடுப்பு நடவடிக்கைகளான தகுந்த இடைவெளி, முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை பின்பற்றுவதோடு கூட்டங்களைத் தவிர்த்தல் வேண்டும்.
- கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுதல் வேண்டும்.
இவ்வாறு தொடக்கக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.