சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொல் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு, சுமார் 12.21 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய 'அகழ் வைப்பகம்' அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இதன் முதற்கட்டமாக 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
திருப்புவனம் வட்டம், கொந்தகை கிராமத்தில் 0.810 ஏர் நிலத்தில் காட்சி அறைகள், ஒப்பனை அறை, நூல் விற்பனை கடையுடன் கூடிய விரிந்த 'அகழ் வைப்பக' வளாகம் அமைக்கப்படுகிறது.
அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் தற்போது, மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டப் பொருட்களை வருங்கால தலைமுறையினர், தொல்லியல் அறிஞர்கள், மாணவர்கள், அயல்நாட்டு வல்லுநர்கள் அறிந்து கொள்ளும் வகையில் 'அகழ் வைப்பகம்' அமைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: பட்டினபாக்கம் டூ பெசன்ட் நகர் சாலையை மீண்டும் தொடங்குவதற்கு ஆய்வுசெய்ய உத்தரவு!