கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில், 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், மற்றும் என்ஐடி ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக, மாணவர் ஒருவருக்கு 2 லட்சம் வீதம் முதற்கட்டமாக 100 மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் எனவும், இதற்காக 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர் மரபினராக இருத்தல் வேண்டும். ஐஐடி, ஐஐஎம், என்ஐடி, மத்தியப் பல்கலைக் கழகங்களில் பட்டம், பட்ட மேற்படிப்பு படிப்பவராக இருத்தல் வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதற்கான அரசாணையை பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை இன்று வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு 100 மாணவ, மாணவிகள் அரசின் நிபந்தனைக்குள்பட்டு, தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி பெற உள்ளனர்.
இதையும் படிங்க: ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தொடரும் மாணவர்கள் போராட்டம்!