சோழப்பேரரசன் ராஜராஜனால் கட்டியெழுப்பப்பட்ட தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கு விழா நெருங்குவதையொட்டி, அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழர்கள் இந்தக் குடமுழுக்கு விழாவிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10 லட்சத்திற்க்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், தங்கும் வசதிகள் உள்ளிட்டவைக் குறித்து மேற்பார்வையிட்டு குடமுழுக்கு ஏற்பாடுகளை முறைப்படுத்த தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலர் தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தக் குழுவில், நிதித் துறை கூடுதல் செயலர், உள்ளாட்சித் துறை கூடுதல் செயலாளர் உள்ளிட்ட 20 அரசுத் துறை உயர் அலுவலர்கள் உறுப்பினர்களாக இருப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு - தமிழில் நடத்த வலியுறுத்தி மாநாடு!