தமிழ்நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு திமுக தொடுத்த வழக்கின் காரணமாக, அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தப்பட்டது. எனவே, உள்ளாட்சிப் பணிகளில் சுணக்கம் ஏற்படாத வகையில், உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அலுவலர்கள் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஊரகப் பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, அதன் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் வரும் 11ஆம் தேதி நடக்கவிருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்னும் தேர்தல் நடத்தப்படாததால், அங்குள்ள சிறப்பு அலுவலர்களுக்கு பணி நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, டிசம்பர் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்த, சிறப்பு அலுவலர்களுக்கான பணிக் காலத்தை, மேலும் 6 மாதங்கள் கால நீட்டிப்பு செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குடியுரிமை சட்ட எதிர்ப்பு தீர்மானம் - ஆய்வில் உள்ளதாக தனபால் தகவல்!