சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது வெளியிடப்பட்ட அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
“பழைய பேருந்துகளுக்குப் பதிலாக புதிய பேருந்துகளை வாங்குவதற்கு ஜெர்மன் நிதி நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி 12 ஆயிரம் BS-VI ரகப் பேருந்துகள், இரண்டாயிரம் மின்சாரப் பேருந்துகளை 2021ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டு காலத்தில் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான தொகையில் 80 விழுக்காடு ஜெர்மன் நிதி நிறுவனம் வட்டி இல்லாமல் கடனாகவும், மீதமுள்ள 20 விழுக்காடு தமிழ்நாடு அரசு பங்காகவும் இருக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ”இலவச பேருந்து: 34 லட்சம் பேர் பயணம்”