முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் இன்று செய்தது.
அதில், 'பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்குமாறு ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரை மட்டுமே செய்துள்ளது. ஏழு பேரை விடுவிக்க எந்த அதிகாரமும் எங்களுக்கு இல்லை. ஏழு பேரை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கலாம்' எனக் குறிப்பிட்டுள்ளது.