ETV Bharat / city

11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் - twelfth

சென்னை: 11, 12ஆம் வகுப்புகளுக்கான 2020 மார்ச் பொதுத்தேர்வை எழுத, தனித்தேர்வர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

exam
exam
author img

By

Published : Dec 6, 2019, 7:23 PM IST

இது தொடர்பாக, அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை பழைய பாடத்திட்டத்தில் ஏற்கனவே எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்கள், மார்ச் 2020, ஜூன் 2020 பருவங்களில் நடைபெறும் பொதுத்தேர்வுகளை பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம்.

கடந்த ஆண்டு நேரடித் தனித்தேர்வர்களாக 11ஆம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெறாத தேர்வர்கள், தற்போது மேல்நிலை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதுவதற்கும் 11ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.

மேலும், தனித்தேர்வர்கள் மீண்டும் தேர்வெழுத, சேவை மையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவர்கள் தற்போது பயிலும் பள்ளிகள் மூலமே தேர்வெழுதுவதற்கு உரிய கட்டணத்தை செலுத்தலாம்.

மாணவர்கள்
மாணவர்கள்

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை ஏற்கனவே நேரடித் தனித்தேர்வராக எழுதி தேர்ச்சிப் பெற்ற தேர்வர்களும் மார்ச் 2020, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.

மேலும், தேர்வு எழுத விரும்புவோர், டிசம்பர் 11 முதல் 20ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வுகள் சார்ந்த விரிவான தகவல்களை ’ www.dge.tn.gov.in ‘ என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் போராட்டம்!

Intro:
11,12 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத
தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் Body:
11,12 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத
தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை,

11,12 ம் வகுப்பு 2020 மார்ச் பொதுத் தேர்வினை எழுதுவதற்கு தனித்தேர்வர்கள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

ஏற்கனவே 11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி
பெறாதவர்கள் மார்ச் 2020 மற்றும் ஜூன் 2020 பருவங்களில் நடைபெறும்
பொதுத்தேர்வுகளை பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம்.
கடந்த ஆண்டு நேரடித் தனித்தேர்வராக 11 ம் வகுப்பு
தேர்வெழுதி தேர்ச்சி பெறாத தேர்வர்கள் அனைவரும், தற்போது மேல்நிலை
12 ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதுவதற்கும், 11 ம் வகுப்பு தேர்வில்
தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.

பள்ளி மாணவர்கள் மார்ச் 2019 பருவத்தில் 11 ம் வகுப்பு தேர்வெழுதிய
அனைவரும், தோல்வியடைந்த பாடங்களில் மீண்டும் தேர்வெழுத சேவை
மையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவர்கள்
தாங்கள் தற்போது 12 பயிலும் பள்ளிகள் மூலம் தேர்வெழுதுவதற்கு உரிய
தேர்வுக் கட்டணத்தினை மட்டும் செலுத்த வேண்டும்.

11 ம் வகுப்பு பொதுத் தேர்வினை ஏற்கனவே நேரடித் தனித்தேர்வராக எழுதி தேர்ச்சிப் பெற்ற தேர்வர்கள் அனைவரும், மார்ச் 2020 12 ம் வகுப்பு பொதுத்தேர்வெழுத
விண்ணப்பிக்கலாம்.

கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின்
விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்
விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், அனைத்து முதன்மைக் கல்வி
அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள்
மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து
கொள்ளலாம்.

மேலும், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து
கொள்ளலாம்.

தனித்தேர்வர்களாக தேர்வு எழுத விரும்புபவர்கள் டிசம்பர் 11 ந் தேதி முதல் 20 ந் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள் அவரவர்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திலேயே தேர்வு எழுத வேண்டும்.
தேவையான இணைப்புகள் இல்லாத 11,12 ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான விண்ணப்பங்கள் மற்றும் தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக எவ்வித முன்னறிவிப்புமின்றி தானாகவே நிராகரிக்கப்படும். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை தனித்தேர்வர்களுக்குத் தேர்வெழுத
வழங்கப்படும் அனுமதி தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம்
மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்டப் பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
இந்த தேர்வுகள் சார்ந்த விரிவான தகவல்களை www.dge.tn.gov.in
என்ற இணையதளத்தில் காணலாம்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.