ETV Bharat / city

அவைத்தலைவர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் தொடக்கம்

author img

By

Published : Mar 2, 2020, 9:36 AM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் அவைத்தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெற்றுவருகிறது.

தலைமைச் செயலகத்தில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு சார்பில் 2020-202ஆ1ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த 14ஆம் தேதி நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல்செய்தார். இதைத்தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் கடந்த 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெற்றன.

கடந்த 20ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் வருகிற மார்ச் 9ஆம் தேதி முதல் மீண்டும் நடைபெறும் என்று சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன் அறிவித்தார்.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும், இதில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டப்பேரவை உறுப்பினர் அபுபக்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தை எத்தனை நாள்கள் நடத்துவது, எந்தெந்தத் தேதியில் எந்தத் துறை மீது விவாதம் நடத்துவது என்பது குறித்து முடிவுசெய்யப்படவுள்ளது.

இதையும் படிங்க:

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்: முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.