ETV Bharat / city

வேட்புமனு தாக்கல்... நல்ல நாள் பார்க்கும் வேட்பாளர்கள் - மார்ச் 12, 15 நல்ல நாட்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 12 ஆம் தேதி தொடங்குகிறது. மார்ச் 12 மற்றும் 15 நல்ல நாட்கள் என்பதால் அன்றைய தினம் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

hbj
bhj
author img

By

Published : Mar 1, 2021, 3:03 PM IST

Updated : Mar 1, 2021, 3:49 PM IST

வேட்புமனு தாக்கல்....

நல்ல நாள் பார்க்கும் வேட்பாளர்கள்...

அலை அலையாய் ஆதரவாளர்கள், நீண்ட வாகன அணிவகுப்பு, விண்ணைப் பிளக்கும் போடுங்கம்மா ஓட்டு கோஷம், வேட்பாளருக்கு குவியும் மாலைகள், வேட்பாளருடன் கைகுலுக்க போட்டி போடும் தொண்டர் கூட்டம், வேட்புமனு தாக்கலுக்கு முன்பே எம்எல்ஏ ஆகிவிட்டதாக கனவு காணும் வேட்பாளர்கள்.. ஆம்.. ஒவ்வொரு தேர்தல் வேட்பு மனுத்தாக்கலின் போதும் இந்த காட்சிகளை நாம் பார்க்கலாம்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. மார்ச் 12ஆம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், மார்ச் 19 இல் நிறைவடைகிறது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக தலைமை பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

பொதுவாக வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாளில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டுவதில்லை. நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து அதுவும் முகூர்த்த நாளில்தான் வேட்புமனு தாக்கல் செய்வார்கள். இன்னும் சிலர் அமாவாசை நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய விரும்புவார்கள். கட்சி தலைமையின் உத்தரவுக்காக பல வேட்பாளர்கள் காத்திருப்பார்கள். அதிமுக உள்ளிட்ட கட்சி தலைமை, நல்ல நாள் பார்த்து அன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்களுக்கு உத்தரவிடும்.

தேர்தல் அட்டவணை
தேர்தல் அட்டவணை

அதுவும் வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாளில் அல்லது அதற்கு முந்தைய நாட்களில் பெரும்பாலான வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய மொத்தமாக திரள்வார்கள். இதனால் அன்றைய நாள் முழுவதும் மனு தாக்கல் செய்யும் அரசு அலுவலகங்கள் பரபரப்புடன் காணப்படும்.

முக்கிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் தங்கள் பலத்தை காட்டுவதற்காக ஆதரவாளர்கள் புடைசூழ தாரை, தப்பட்டை மேள தாளத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்ய ஊர்வலமாக செல்வார்கள். வேட்பாளர்களுக்கு மாலை, துண்டுகள் குவியும். செல்வந்தர் வேட்பாளர் என்றால் கேட்கவே வேண்டாம்.

வேட்பு மனுத்தாக்கல் ஊர்வலம்
வேட்பு மனுத்தாக்கல் ஊர்வலம்

முந்தைய தேர்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்யும் அரசு அலுவலகங்களில் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் கூட்டம் அலைமோதும். வேட்புமனு தாக்கல் செய்யும் புகைப்படம்,மற்றும் வீடியோவில் தாங்களும் இடம் பெற வேண்டும் என தொண்டர்கள் ஒருவரை ஒருவர் அடித்துப்பிடித்து கொண்டு முகத்தை காட்ட போஸ் கொடுப்பார்கள். தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டு கடைசி நாளில் அறிவிக்கப்படும் வேட்பாளர்கள், அலறியடித்தபடி வேட்புமனு தாக்கலுக்கு ஓடும் காட்சிகள் அடிக்கடி நடைபெறும்.

ஆனால் கரோனா பெருந்தொற்று காரணமாக 2021 ஆம் ஆண்டு தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளருடன் இருவருக்கு மட்டுமே அனுமதி, ஊர்வலம் நடத்த உரிய முன் அனுமதி, செலவு கணக்கு தாக்கல், பணம் எடுத்து செல்லுதல் உள்ளிட்டவற்றில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளர்களுடன் இருவர் மட்டுமே இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

வேட்பு மனுத்தாக்கல்
வேட்பு மனுத்தாக்கல்

இந்நிலையில்,சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12 ஆம் தேதி தொடங்குகிறது. அடுத்த நாளான மார்ச் 13ஆம் தேதி அமாவாசை நாள் என்பதால் அன்றைய தினம் பல வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் மார்ச் 15 ஆம் தேதி திங்கட்கிழமை வளர்பிறை முகூர்த்தம் என்பதால், அன்றும் அதிக எண்ணிக்கையில் வேட்புமனு தாக்கல் ஆகலாம்.

அதிமுக, பாஜக, தேமுதிக,காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி வேட்பாளர்களும் நல்ல நாள் பார்த்த பின்னரே வேட்புமனு தாக்கல் செய்வார்கள். இதில் கட்சி பேதமில்லை. இதற்கு முன் நல்ல நாள் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்களா அல்லது தோல்வி அடைந்தார்களா என்பது முக்கியமல்ல. ஆனால் அனைத்து வேட்பாளர்களும் நல்ல நாள் பார்த்துதான் களத்தில் குதிப்பார்கள். எனவே குறிப்பிடட் அந்த இரு நாட்களில் தமிழக அரசியல் களம் களை கட்டும் என்பதில் ஐயமில்லை.

Last Updated : Mar 1, 2021, 3:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.