டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம், ”ஒவ்வொரு நிதியாண்டிலும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன் மாநில அரசின் கருத்துகள், திட்டங்களுக்கான நிதிகள் குறித்து கலந்துபேசுவது மரபு.
அதனடிப்படையில், தமிழ்நாட்டின் சார்பில் அக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டப்பணிகளுக்குத் தேவையான நிதியையும் பல்வேறு திட்டங்கள் மூலமாகத் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதியையும் கேட்டுப் பெறவிருக்கிறோம்.
அண்மைக் காலமாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அரசு மீது உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளைக் கூறிவருகிறார். அதுபோலத்தான் தேர்தல் ஆணையத்தின் மீது அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்திருக்கிறார். குடியுரிமை திருத்தச்சட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் கருத்து கூற முடியாது “ என்று கூறினார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு பரிசீலனை - அதிமுக அமமுகவினர் தள்ளுமுள்ளு