சென்னை: தமிழ்நாட்டின் டிசம்பர் 11ஆம் தேதிக்கான கரோனா நிலவரம் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வு துறை டிசம்பர் 11ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, தமிழ்நாட்டில் புதிதாக 69 ஆயிரத்து 999 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 1,233 நபர்களுக்கும், கர்நாடக, பிகாரிலிருந்து வந்த தலா ஒருவருக்கு என 1,235 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 25 லட்சத்து 19 ஆயிரத்து 251 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிலிருந்து 7 லட்சத்து 96 ஆயிரத்து 475 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதில், தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 10 ஆயிரத்து 299 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 1311 நபர்கள் குணமாக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 74 ஆயிரத்து 306 என உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி 8 பேரும், அரசு மருத்துமனைகளில் 9 பேருமென 17 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களை சேர்த்து மொத்தமாக இறந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 870 என உயர்ந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் சில நாளாக புதிதாக யாருக்கும் நோய்த் தொற்று கண்டறியப்படவில்லை. அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தலா இரண்டு நபர்களுக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நபர்களுக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 நபர்களுக்கும், தென்காசி மாவட்டத்தில் ஏழு நபர்களுக்கும், சிவகங்கை, கரூர் மாவட்டத்தில் தலா 8 நபர்களுக்கும், திருவாரூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தலா ஒன்பது நபர்களுக்கும் என ஒற்றை இலக்கத்திலே நோய்த்தொற்று பதிவாகியுள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
- சென்னை - 2,19,168
- கோயம்புத்தூர் - 50,196
- செங்கல்பட்டு - 48,570
- திருவள்ளூர் - 41,646
- சேலம் - 30,675
- காஞ்சிபுரம் - 28,082
- கடலூர் - 24,405
- மதுரை - 20,047
- வேலூர் - 19,739
- திருவண்ணாமலை - 18,875
- தேனி - 16,709
- தஞ்சாவூர் - 16,699
- விருதுநகர் - 16,087
- கன்னியாகுமரி - 15,956
- தூத்துக்குடி - 15,838
- ராணிப்பேட்டை - 15,733
- திருப்பூர் - 16,074
- திருநெல்வேலி - 15,027
- விழுப்புரம் - 14,766
- திருச்சிராப்பள்ளி - 13,714
- ஈரோடு - 12,968
- புதுக்கோட்டை - 11,245
- கள்ளக்குறிச்சி - 10,720
- திருவாரூர் - 10,640
- நாமக்கல் - 10,709
- திண்டுக்கல் - 10,559
- தென்காசி - 8,159
- நாகப்பட்டினம் - 7,841
- நீலகிரி - 7,647
- கிருஷ்ணகிரி - 7,602
- திருப்பத்தூர் - 7,334
- சிவகங்கை - 6,396
- ராமநாதபுரம் - 6,254
- தருமபுரி - 6,215
- கரூர் - 4,957
- அரியலூர் - 4,606
- பெரம்பலூர் - 2,248
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 928 ஆகவும், உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1013 ஆகவும், ரயில் மூலம் வந்தவர்கள் 428 ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளது.