சென்னை: தினேஷ் மற்றும் ஜனகநந்தினி ராமசாமி ஆகியோர் பிப்ரவரி முதல் ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவலிங்கபுரம் கிராமத்தில் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். திருமண வரவேற்பு நிகழ்வை டிஜிட்டல் முறையில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் (மெட்டாவேர்ஸில்) நடத்த திட்டமிட்டுள்ளனர்.
திருமணம் முடிந்த பின்னர் மடிக்கணினி மூலம் வரவேற்பை இணையம் மூலம் உலகம் முழுவதும் இருக்கும் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் வகையில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் இயக்கவிருக்கிறார்கள்.
இது குறித்து தினேஷ் கூறும்போது, ”எனக்கு மெட்டாவேர்ஸ் திருமண வரவேற்பை நடத்த வேண்டும் என தோன்றியதை எனது வருங்கால மனைவியிடம் கூறினேன். அந்த யோசனை அவருக்கும் பிடித்திருந்தது. ஹரிபாட்டர் கதைகளில் வருவதைப் போல் மிகப்பிரமாண்ட கட்டிடங்களை வடிவமைத்து Hogwarts School of Witchcraft and Wizardry இடத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது.
மேலும், கிரிப்டோ மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ளேன். கடந்த ஒரு வருடமாக கிரிப்டோகரன்சியின் ஒரு வடிவமான எத்திரையம் மைனிங் செய்து வருகிறேன். பிளாக்செயின் என்பது மெட்டாவெர்ஸின் அடிப்படை தொழில்நுட்பம் என்பதால், எனது திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், மெட்டாவேர்ஸில் வரவேற்பு நடத்த நினைத்தேன்.
-
I feel so proud and blessed that I have seen and taken advantage of many great opportunities in this world before millions of people have seen them, Beginning of something big! India’s first #metaverse marriage in Polygon blockchain collaborated with TardiVerse Metaverse startup. pic.twitter.com/jTivLSwjV4
— Dinesh Kshatriyan 💜 (@kshatriyan2811) January 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I feel so proud and blessed that I have seen and taken advantage of many great opportunities in this world before millions of people have seen them, Beginning of something big! India’s first #metaverse marriage in Polygon blockchain collaborated with TardiVerse Metaverse startup. pic.twitter.com/jTivLSwjV4
— Dinesh Kshatriyan 💜 (@kshatriyan2811) January 11, 2022I feel so proud and blessed that I have seen and taken advantage of many great opportunities in this world before millions of people have seen them, Beginning of something big! India’s first #metaverse marriage in Polygon blockchain collaborated with TardiVerse Metaverse startup. pic.twitter.com/jTivLSwjV4
— Dinesh Kshatriyan 💜 (@kshatriyan2811) January 11, 2022
மெட்டாவர்ஸ் என்பது மெய்நிகர் ரியாலிட்டி (Virtual Reality) உலகமாகும். அதனை பயன்படுத்துபவர்கள் டிஜிட்டல் அவதாரங்கள் மூலம் வாழவும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் முடியும்.
எனது திருமண வரவேற்பு எப்படி இருக்கும் என்பதைக் காட்ட ஒரு சிறிய காணொளியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளேன். அதில் ’இந்தியாவின் முதல் மெட்டாவேர்ஸ் திருமணம்’ என பதிவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
முப்பரிமாண தொழில்நுட்பத்தில் நடத்தப்படும் இணையம் வரவேற்பறையில் கலந்து கொண்டு மணமகனும், மணமகளும் தொடர்புகொள்வது மட்டுமல்லாமல், அவர்களுக்கு பரிசுகளையும் வழங்க முடியும்.
இணையம் பணப்பரிவர்த்தனை வாயிலாக பரிசுப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தினேஷ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருப்பத்தூரில் எருது விடும் விழா - 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு