சென்னை: தமிழ்நாட்டில் இன்று (செப். 14) மேலும் 5 ஆயிரத்து 752 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் இன்று(செப்.14) மேலும் 5 ஆயிரத்து 752 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனாவிலிருந்து இன்று மட்டும் 5 ஆயிரத்து 793 பேர் குணமடைந்துள்ளனர். 53 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 8ஆயிரத்து 511ஆக உயர்ந்துள்ளது.
அதைத்தொடர்ந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 53ஆயிரத்து 165ஆகவும்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 434ஆகவும் அதிகரித்துள்ளது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக கரோனா பாதிப்பு:
- சென்னை மாவட்டம் - 1,49,583
- செங்கல்பட்டு மாவட்டம் - 30,743
- திருவள்ளூர் மாவட்டம் - 28,620
- கோயம்புத்தூர் மாவட்டம் - 22,662
- காஞ்சிபுரம் மாவட்டம் - 19,570
- மதுரை மாவட்டம் - 15,394
- கடலூர் மாவட்டம் - 16,567
- விருதுநகர் மாவட்டம் - 13726
- தேனி மாவட்டம் - 13,833
- சேலம் மாவட்டம் - 14,774
- திருவண்ணாமலை மாவட்டம் - 13,296
- தூத்துக்குடி மாவட்டம் - 12,374
- வேலூர் மாவட்டம் - 12,765
- ராணிப்பேட்டை மாவட்டம் - 12,195
- திருநெல்வேலி மாவட்டம் - 11,192
- கன்னியாகுமரி மாவட்டம் - 11,094
- விழுப்புரம் மாவட்டம் - 9,571
- திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 8914
- தஞ்சாவூர் மாவட்டம் - 8,466
- திண்டுக்கல் மாவட்டம் - 7,940
- கள்ளக்குறிச்சி மாவட்டம் - 8,019
- புதுக்கோட்டை மாவட்டம் - 7,525
- தென்காசி மாவட்டம் - 6,344
- ராமநாதபுரம் மாவட்டம் - 5,270
- திருவாரூர் மாவட்டம் - 5,409
- சிவகங்கை மாவட்டம் - 4,557
- ஈரோடு மாவட்டம் - 4,668
- திருப்பூர் மாவட்டம் - 4,938
- நாகப்பட்டினம் மாவட்டம் - 4,201
- திருப்பத்தூர் மாவட்டம் - 3,783
- அரியலூர் மாவட்டம் - 3,289
- நாமக்கல் மாவட்டம் - 3,462
- கிருஷ்ணகிரி மாவட்டம் - 3,252
- நீலகிரி மாவட்டம் - 2,443
- கரூர் மாவட்டம் - 2,220
- தருமபுரி மாவட்டம் - 2,116
- பெரம்பலூர் மாவட்டம் - 1,555
மேலும், சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 922 பேரும், உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 894 பேரும், ரயில் மூலம் வந்தவர்கள் 428 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.