சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக இன்று (ஆகஸ்ட் 2) 5875 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விபர தகவலில், தமிழ்நாட்டில் புதிதாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் கரோனா பரிசோதனை செய்வதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 122ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 58 ஆயிரத்து 505 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 5875 நபர்களுக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 26 லட்சத்து 77 ஆயிரத்து 17 நபர்களுக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 613 நபர்கள் நோயினால் பாதிக்கப்பட்டனர்.
இவர்களில் தற்போது 56 ஆயிரத்து 998 நபர்கள் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் சிகிச்சைப் பெற்றவர்களில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 517 பேர் குணம் அடைந்த பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 483ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றவர்களில் சிகிச்சை பலனின்றி இன்று ஒரே நாளில் 98 பேர் இறந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4,132ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக ஆயிரத்து 65 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குணமடைந்து 1303 பேர் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் (மாவட்ட வாரியாக) | |
சென்னை | 1,01,951 |
செங்கல்பட்டு | 15,312 |
திருவள்ளூர் | 14,430 |
மதுரை | 11,352 |
காஞ்சிபுரம் | 9785 |
விருதுநகர் | 8491 |
தூத்துக்குடி | 7628 |
திருவண்ணாமலை | 6446 |
வேலூர் | 5469 |
கோயம்புத்தூர் | 5230 |
கன்னியாகுமரி | 5092 |
திருச்சிராப்பள்ளி | 4416 |
விழுப்புரம் | 4022 |
கள்ளக்குறிச்சி | 3840 |
சேலம் | 3804 |
கடலூர் | 3415 |
ராமநாதபுரம் | 3338 |
தஞ்சாவூர் | 3008 |
திண்டுக்கல் | 2990 |
சிவகங்கை | 2471 |
புதுக்கோட்டை | 2383 |
தென்காசி | 2315 |
திருவாரூர் | 1781 |
திருப்பத்தூர் | 1234 |
கிருஷ்ணகிரி | 1102 |
அரியலூர் | 1023 |
திருப்பூர் | 949 |
நீலகிரி | 812 |
நாகப்பட்டினம் | 789 |
தருமபுரி | 787 |
நாமக்கல் | 757 |
ஈரோடு | 754 |
கரூர் | 560 |
பெரம்பலூர் | 524 |
மொத்தம் | 2,57,613 |