ETV Bharat / city

குறைந்துவரும் கொரோனா தொற்று; 27ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நலம்! - கரோனா தொற்று

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 15,108 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், 27,463 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

குறைந்துவரும் கரோனா தொற்று, குறைந்துவரும் கொரோனா தொற்று, கரோனா தொற்று, தொற்று அதிகமுள்ள மாவட்டங்கள்
குறைந்துவரும் கொரோனா தொற்று
author img

By

Published : Jun 12, 2021, 9:15 PM IST

சென்னை: கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறித்த தகவலை தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, "தமிழ்நாட்டில் 15,108 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட 27,463 பேர் குணமடைந்துள்ளனர். 374 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 2,90,36,960 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,39,705ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 21,48,352ஆகவும் அதிகரித்துள்ளது. அத்துடன் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 29,280ஆக உயர்ந்துள்ளது.

தொற்று அதிகமுள்ள மாவட்டங்கள்

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 989ஆகக் குறைந்துள்ளது. கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 9838 என குறைந்துள்ளது.

கோயம்புத்தூரில் மேலும் புதிதாக 1982 பேரும், ஈரோட்டில் 1353 பேரும் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலத்தில் 894 பேரும், திருப்பூரில் 844 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.